குறைக்கவோ, நீக்கவோ சொல்லத்தெரியாத அளவுதான் பெரிய ஸ்டார்களின் ஞானம் உள்ளதா?.. ப்ளூ சட்டை மாறன் கேள்வி

Nov 15, 2024,01:13 PM IST

சென்னை:  படத்தில் பல கேவலமான காட்சிகளை முன்பே பார்த்துவிட்டு... தேவையில்லா சீன்கள் மற்றும் காது கிழியும் இசையை குறைக்கவோ, நீக்கவோ சொல்லத்தெரியாத அளவுதான் இந்த பெரிய ஸ்டார்களின் ஞானம் உள்ளதா? என்று திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.


சமீப காலமாக மிகப் பெரிய ஸ்டார்களின் படங்கள் பெரும் தோல்வியைத் தழுவுகின்றன அல்லது பெரும் வெற்றியைப் பெறத் தவறி விடுகின்றன. இந்தியன் 2 படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் வசூலில் அது சாதிக்கவில்லை. கடுமையான விமர்சனங்களையும் கூட அது சந்தித்தது. கமல் நடித்த படமா இது என்று கூட பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.


இப்போது கங்குவா படமும் கூட இதே போன்ற ஒரு விமர்சனத்தை சந்தித்துள்ளது. பெரும்பாலான விமர்சகர்கள் இந்தப் படத்தை சரியில்லை என்று கூறி விட்டனர். பட புரோமஷனின்போது கூறப்பட்டதற்கும், படத்துக்கும் சம்பந்தமே இல்லை. படத்தில் ஒரே இரைச்சலாக உள்ளது. பலரும் கத்தி கத்தி பேசுகின்றனர். காட்சிகளில் எந்தவிதமான விறுவிறுப்பும் இல்லை. ஏகப்பட்ட லாஜிக் குறைபாடுகள் என்றும் பலர் குறை கூறி வருகின்றனர்.




இந்த நிலையில் திரைப்பட விமர்சகர் ப்ளூசட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


கமல், விக்ரம், சூர்யாவை ஷங்கர், ரஞ்சித், சிறுத்தை சிவா வச்சி செஞ்சிட்டாங்க. பலமணி நேர மேக்கப், சிக்ஸ் பேக் உழைப்பு எல்லாம் வீணா போச்சி என உருகுவோரின் கவனத்திற்கு..


பெரிய ஸ்டார்களின் படங்கள் ஜெயித்தால் அதற்கு முக்கிய அல்லது முழு காரணமும் அவர்தான் என ஓவர் பில்டப் செய்வது.  படம் ஊத்திக்கொண்டால் பழியை தூக்கி இயக்குனர் மேல் போடுவது. என்னடா இது பித்தலாட்டம்?


தன் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், முக்கிய டெக்னீசியன்கள், உடன் நடிக்கும் முக்கிய கேரக்டர்கள் என அனைத்தையும் ஓகே செய்வது இந்த ஸ்டார்கள்தான். அதுபோக.. இயக்குனரின் கதையில் தலையிட்டு அதை குழப்பி வேறு டிசைனில் மாற்றுவது, எடிட்டிங் போன்ற போஸ்ட் புரடக்சன்,பட ப்ரமோசன் என இவர்கள் தலையிடாத ஏரியாவே இல்லை.


ப்ரமோஷனில் கூட படத்தை பற்றி பேசுவதை விட ஹீரோ புராணம்தான் அதிகம் பேசுவார்கள். நீண்ட நேரம் மேக்கப், சிக்ஸ் பேக் வைக்கத்தான் பலகோடி சம்பளம். கேரவன், ஸ்டார் ஹோட்டல் உணவு என பல வசதிகள். சிக்ஸ் பேக் வைத்த எந்த ஹீரோவும் ஷூட்டிங்கில் பசியால் வாடி மயங்கியதில்லை.தேவையான எல்லா டயட் உணவும் தயாரிப்பாளர் செலவில் தரப்படுகிறது. ஆகவே ஓவராக புல்லரிக்க வேண்டாம்.


உண்மையாகவே மிக பிரம்மாண்ட, நேர்த்தியான படமெடுத்த ஹாலிவுட் இயக்குனர்கள், ஹீரோக்கள் கூட மேடைக்கு மேடை.‌ நாங்கள்  கஷ்டப்பட்டு உழைத்தோம், சாப்பிடாமல் களைத்தோம் என மூக்கு சிந்தியதில்லை. இங்கு மட்டும்தான் இதெல்லாம். படத்தில் பல கேவலமான காட்சிகளை முன்பே பார்த்துவிட்டு... தேவையில்லா சீன்கள் மற்றும் காது கிழியும் இசையை குறைக்கவோ,நீக்கவோ சொல்லத்தெரியாத அளவுதான் இந்த பெரிய ஸ்டார்களின் ஞானம் உள்ளதா?


ஒவ்வொரு மனிதனும்.. தான் உழைத்த பணத்தில்தான் டிக்கட், தின்பண்டம், பார்க்கிங் என 300 முதல் சில ஆயிரம் வரை செலவு செய்து.‌ மொக்கை படத்தை பார்த்து கோவத்தில் வெளியே வருகிறான்.


பணம் மட்டுமல்ல. பாதி நாளும் வீணாய் போகிறது. ஹீரோக்கள் எல்லாம் வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்தாலும் திங்க தெரியாத அப்பாவிகள் அல்ல. படத்தின் தோல்விக்கு முக்கால்வாசி பொறுப்பு அவர்களையே சாரும். ஆகவே இவர்களுக்கு எல்லை மீறி முதுகு சொறியும் சொம்பு தூக்கிகள் அடக்கி வாசிப்பதுதான் நல்லது. இல்லாவிட்டால் பொதுமக்கள் உங்களை இப்படித்தான் சட்டியில் போட்டு வறுப்பார்கள். பொய் மூட்டைகள் எதுவும் எடுபடாது‌. 


உழைச்சிருக்காரு, குலைச்சிருக்காருன்னா.. அது நல்ல படமா இருக்கனும்‌. இல்லன்னா தர்ம அடிதான்‌ என்று அவர் காட்டமாக கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க தடை.. தடுப்பூசி போட்டு விடுவிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

பக்குவம் இல்லாதவரை மக்கள் எப்படி ஏற்பார்கள்? : விஜய் குறித்து அண்ணாமலை கேள்வி!

news

கோடை வந்தால் வறட்சி, மழை வந்தால் வெள்ளம்... இது தான் இன்றைய சென்னையின் அடையாளம்: டாக்டர் அன்புமணி

news

பத்து மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!

news

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த விஜய்... அவரது தராதரம் அவ்வளவு தான்: கே.என்.நேருவின் பதில்!

news

Mr.Prime Minister என்று சொல்லும் அளவிற்கு விஜய் இன்னும் வளரவில்லை: நடிகர் சரத்குமார்

news

ஷ்ரேயாஸ் ஐயரை ஒரு நாள் டீமுக்கான கேப்டனாக்கப் போறோமா.. மறுக்கும் பிசிசிஐ

news

நிரம்பி வழியும் பவானிசாகர் அணை.. பார்க்கவே படு ஜோரா இருக்கு!

news

தங்கம் விலை நிலவரம்... நேற்று உயர்ந்த நிலையில் இன்று குறைவு... எவ்வளவு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்