மும்பை: பாலிவுட் நடிகர் சைப் அலிகான் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர், அவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சைப் அலிகான் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். வீட்டில் குடும்பத்தாருடன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது இன்று அதிகாலை 2.30 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையடித்ததோடு நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியுள்ளாராம். அப்போது சத்தம் கேட்டு குடும்ப உறுப்பினர்கள் வெளியே வந்ததைப் பார்த்து கொள்ளையன் தப்பி ஓடி விட்டார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி போலீசார் குற்றவாளியை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் எப்ஐ ஆர் பதிவு செய்து, விசாரணைக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
கொள்ளையடிக்க வந்தபோது சைப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டாரா அல்லது இது முன்கூட்டியே திட்டமிட்ட கொலை முயற்சியா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
கத்திக்குத்தால் படுகாயம் அடைந்த நடிகர் சைப் அலிகான் தற்போது லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மருத்துவமனை வட்டாரத்தில் கூறுகையில், சைபர் அலிகான் அதிகாலை 3.30 மணி அளவில் கத்திக் குத்துக் காயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு இரண்டு மூன்று இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயங்களில் ஒன்று அவரது முதுகெலும்பு அருகில் உள்ளது.
இதனால் நரம்பியல் நிபுணர் டாக்டர் நிதின் டாங்கே, அழகு சிகிச்சை நிபுணர் டாக்டர் லீனா ஜெயின் மற்றும் மயக்க மருந்து டாக்டர் நிஷா காந்தி ஆகியோர் அங்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அறுவை சிகிச்சை முடிந்த பின்னரே சைப் அலிகானின் உடல்நிலை குறித்து விபரங்கள் தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்ற சைப் அலிகான் மீதான இந்த கத்திக்குத்து சம்பவம் ஹிந்தி திரை உலகில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?
2026 புத்தாண்டில் தமிழக அரசியல் எப்படி இருக்கும்? ஒரு அலசல்
இந்தியாவின் புதிய மைல்கல்... உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக உயர்வு!
புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலின் தல வரலாறு
உலகத்திலேயே மிகப் பெரிய பெருமிதம் எது தெரியுமா.. Proud To Be A Woman!
ஹலோ ஏஐ.. உன்னால் இதைச் செய்ய முடியுமா.. Will AI Heal the Earth We Scarred?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக முள் சீதா பயன்பாடு
பரபரப்பு.. படபடப்பு.. அந்த கடைசி நேர டென்ஷன்.. THE FINAL SUBMISSIONS..!
{{comments.comment}}