சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சிறிது நேரத்திலேயே மிரட்டல் விடுத்த தேவராஜ் என்பவரை போலீஸாார் கைது செய்தனர்.
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை உள்ளது. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் குண்டு வைத்திருப்பதாகவும், அந்த குண்டு எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று, சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் உடனே ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு நிபுணர்களை அழைத்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போனில் வந்த தகவல் புரளி என்று தெரிய வந்தது.

இந்நிலையில் போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை செய்ததில் மிரட்டல் விடுத்தவர் சிக்கினார். அவரது பெயர் தேவராஜ். கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. இருப்பினும் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே பாணியில் கடந்த சில நாட்களாகவே மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக பள்ளிக்கூடங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவது சகஜமாகி விட்டது. ஆளுநர் மாளிகைக்கு தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}