மும்பை: மும்பை லோக்கல் ரயிலில் குண்டு வெடிக்கும் என்று மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளதால் ரயில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மும்பை போலீஸாருக்கு இதுதொடர்பாக ஒரு தொலைபேசி மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் ஒரு ஆண் பேசினார். அந்த நபர் கூறுகையில், மும்பையில் உள்ள ஒரு உள்ளூர் ரயிலில் தொடர் குண்டுவெடிப்புகள் நடக்கவுள்ளன. நான் விலே பார்லே பகுதியிலிருந்து பேசுகிறேன் என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

அந்த நபரின் மிரட்டலை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. ரயில்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் படையினரும், மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
தொலைபேசியில் பேசிய மர்ம நபரைக் கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் மும்பை பல தீவிரவாத தாக்குதல் சம்பவங்களைக் கண்டுள்ளது. தொடர் குண்டு வெடிப்புகள் மும்பைக்கு புதிதல்ல. பல முறை தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கி காயம்பட்ட நகரம்தான் மும்பை. ஆனால் சமீப ஆண்டுகளாக எந்தவிதமான தாக்குதலும் இல்லாமல் அமைதியாக இருந்து வரும் நிலையில் தொடர் குண்டு வெடிப்பு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!
{{comments.comment}}