சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இளம் வயது மாணவர்களின் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் தொங்கும் நூலகம் அமைக்கப்பட்டது.
இன்றைய டிஜிட்டல் உலகில் மாணவர்களிடையே குறைந்து வரும் புத்தக வாசிப்புப் பழக்கத்தை மீட்டெடுக்கவும், இளம் வயதிலேயே தேடல் ஆர்வத்தை வளர்க்கவும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி ஒரு முன்மாதிரியான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
வழக்கமான நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களைத் தேடி எடுக்கும் முறையை மாற்றி, மாணவர்கள் எளிதில் அணுகும் வகையில் வகுப்பறைகளிலும் தாழ்வாரங்களிலும் புத்தகங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. இந்த "தொங்கும் நூலகம்" மாணவர்களின் கவனத்தை ஈர்த்து, ஓய்வு நேரங்களில் தாங்களாகவே முன்வந்து வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆல் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனத்தின் மூலமாக தொங்கும் நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியை வள்ளிமயில் வரவேற்றார். தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தொங்கும் நூலதிற்கான புத்தகங்கள் வழங்கப்பட்டது. தொங்கும் நூலகமும் அமைக்கப்பட்டது.
இந்த நூலகம் வாயிலாக மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், மிக எளிதாக புத்தகங்களை வாசிக்கவும் தொங்கும் நூலகம் பயன்படும் என்று தேவகோட்டை ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியின் நிறைவாக ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.
பள்ளியின் இந்தப் புதுமையான முயற்சியை கல்வித் துறையினரும், பெற்றோர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இந்தத் தொங்கும் நூலகம் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிப்பதுடன், அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த நூலகப் பயனாளர்களாக உருவாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}