நண்பேண்டா.. மறக்க முடியாத "பாஸ் என்கிற பாஸ்கரன்".. மறுபடியும் ரிலீஸ் பண்ணப் போறாங்க!

Mar 18, 2024,04:27 PM IST

சென்னை: இயக்குனர் ராஜேஷ் இயக்கிய பாஸ்கரன் என்கிற பாஸ்கரன் திரைப்படம் வரும் மார்ச் 22ஆம் தேதி தமிழக முழுவதும் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.


எம். ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் ராஜேஷ் இயக்கிய மற்றொரு வெற்றிப் படமான பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம் வரும் மார்ச் 22ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்தை அமிர்தா பிலிம்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட உள்ளது.


கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இப்படம் கலகலப்பான ரொமான்ஸ் திரைப்படமாகும். முன்னதாக 2019 ஆம் ஆண்டில் வெளியான சிவா மனசுல சக்தியை இயக்கிய எம். ராஜேஷ் இப்படத்தை  எழுதி இயக்கியிருந்தார். 




ஆர்யா , நயன்தாரா மற்றும் சந்தானம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தானம் மற்றும் ஆர்யாவின் கலக்கல் கூட்டணியில்   தங்களின் நடிப்பின் திறமையால் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்திருப்பர். இப்படம் நடிகர் ஆர்யாவுக்கு தமிழ் திரையுலகில் நல்ல பிளாட்ஃபாமை கொடுத்தது.


குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்ற நண்பேண்டா என்ற வசனம் மிகவும் பிரபலமானது. இந்த வசனம் தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதேபோல மொட்ட ராஜேந்திரனுக்கும் இப்படம் பிரேக் ஆக அமைந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்து  தற்போது வரை ரசிக்கப்பட்டு வருகிறது.




சமீப காலமாக முன்னணி நடிகர்களின் பல வெற்றி திரைப்படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றி பெற்று வரும் நிலையில், பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படமும் வெற்றி பெறும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


தற்போது ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில், இயக்குனர் எம் ராஜேஷ் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் "பிரதர்" படத்தின் இறுதி கட்ட  படப்பிடிப்பில் பணியாற்றி வருகிறார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீவாரி பிலிம்ஸ் ரங்கநாதன் தயாரிப்பில் அதர்வா மற்றும்  அதிதி சங்கர் நடிக்கும் புதிய படம் ஒன்றையும் இயக்க இருக்கிறார். இதற்கான ஆரம்பக்கட்ட தயாரிப்பு பணிகளையும் தற்போது செய்து வருகிறார். இந்த நிலையில் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் ரீ ரிலீஸ் காட்சியை பார்ப்பதற்கு ரசிகர்களோடு ஆவலுடன் காத்திருக்கிறார் இயக்குனர் எம். ராஜேஷ் .

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்