சென்னை: ஜனநாயகன் தோற்க வேண்டும் என்று ஒரு குரூப்பும் (இதில் பெரும்பாலானவர்கள் திரையுலகுக்கு சம்பந்தம் இல்லாத, ஒரு கட்சி சார்ந்த அரசியல் ஆதரவாளர்கள்), பாரசக்தி படு தோல்வி அடைய வேண்டும் என்று இன்னொரு குரூப்பும் (இவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள்) படு தீவிரமாக சமூக வலைதளங்களில் களமாடிக் கொண்டுள்ளனர்.
இப்படி இரு தரப்பும் கொலை வெறியுடன் நடத்திக் கொண்டுள்ள இந்த குரூரமான களமாடுதலை படு கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.. அவர்களைப் பொறுத்தவரை இந்த இரண்டு படங்களுமே பெரும் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் தமிழ் சினிமா பிழைக்கும் என்ற கருத்தில் உள்ளனர். காரணம், தமிழ் சினிமா மகா மோசமான நிலைக்குப் போய்க் கொண்டுள்ளது. வசூலை வாரிக் குவிக்கும் படங்களை விரல் விட்டு எண்ணும் நிலைக்குப் போய் விட்டது தமிழ் சினிமா.
இதில்
விஜய்யின் கடைசிப் படமாக ஜனநாயகன் உருவெடுத்துள்ளது. ரஜினி கமல் போன்றோர் எல்லாம் இன்னும் எத்தனை காலத்துக்கு என்று தெரியவில்லை. பிற மொழிப் படங்கள் எல்லாம் 1000 கோடி வசூலை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ள நிலையில் தமிழ் சினிமா, இன்னும் 100 கோடி, 200 கோடி என்ற அளவில்தான் தன்னை திருப்திப்படுத்திக் கொண்டுள்ளது.
400 கோடிக்கு மேலான வசூல் என்றால் இப்போதைக்கு தமிழ் சினிமாவில் 2 நடிகர்கள்தான், ஒருவர் ரஜினிகாந்த், இன்னொருவர் விஜய். இதில் விஜய் அரசியலுக்கு வந்து விட்டார். அவரது சினிமா சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. ரஜினிகாந்த் மட்டுமே மிச்சம் இருக்கிறார். அவரது வயது இன்னும் எத்தனை காலத்துக்கு ஓட வைக்கும் என்று தெரியவில்லை. அவரை மட்டும் வைத்து தொடர்ந்து தமிழ் சினிமா பிழைத்துக் கொண்டிருக்க முடியாது. மாற்றுகளைக் கண்டுபிடித்தாக வேண்டும்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் தமிழ் சினிமாவில் அடுத்த ரஜினியையும் காணோம், அடுத்த விஜய்யையும் காணோம்.. வசூலை அள்ளித் தரும் இயக்குநர்கள், நடிகர்கள் என மிக மிக அரிதாகவே தமிழ் சினிமாவில் உள்ளனர். இந்த நிலையில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வந்துள்ள ஜனநாயகன், பராசக்தி ஆகிய இரு படங்களும் மிகப் பெரிய அளவில் ஹிட்டடித்தால்தான் தமிழ் சினிமாவுக்கு நல்லது.. இதில் எது தோற்றாலும் அது சரியல்ல என்ற எண்ணமே தமிழ் சினிமாவின் உண்மையான ஆர்வலர்களுக்கும், திரையுலகினருக்கும் உள்ளது.
இதற்கிடையே, பொங்கல் ரேசில் இடம்பெற்றுள்ள விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய இரண்டு படங்களின் டிரெய்லர்களும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. இரு டிரெய்லர்களுமே ரசிகர்களைக் கவந்துள்ளது. இரு படங்கள் மீதான எதிர்பார்ப்பையும் பலமாக அதிகரிக்க வைத்துள்ளது. எத்தனை பே பார்த்தார்கள் என்பதெல்லாம் பெய்ட், நான் பெய்டு சம்பந்தப்பட்டவை என்பதால் அதை வைத்து டிரெய்லரின் முடிவை நாம் தீர்மானிப்பது ஆரோக்கியமாக இருக்காது.
பொதுமக்கள் மத்தியில், பொது ரசிகர்கள் மத்தியில் இரு படங்களின் டிரெய்லர்களுமே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதே விறுவிறுப்புடன் படமும் இருந்தால், படத்தின் கதையும் இதேபோல விறுவிறுப்பாக இருந்தால் நிச்சயம் இரு படங்களும் ஹிட்டுதான்
ஜனநாயகமும் ஜெயிக்கட்டும்.. சக்தியும் வெல்லட்டும்!
{{comments.comment}}