சபரிமலை பக்தர்களே.. மூளை தின்னும் அமீபா அச்சுறுத்தல்.. இதைக் கடைப்பிடிங்க போதும்!

Nov 18, 2025,10:41 AM IST

- சரளா ராம்பாபு


சென்னை: மூளையை தின்னும் அமீபா பரவல் கேரளாவில் இருப்பதால் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் உகந்த தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மூளை தின்னும் ஆமீபா பெரும்பாலும்  சுத்தமில்லா சுகாதாரமற்ற நீர் நிலைகளில்தான் உள்ளது. சுகாதாரமற்ற சகதி நிரம்பிய ஏரி குளம் குட்டை தேங்கிய நீர்களில் இந்த அமீபா காணப்படுகிறது. நாம் நீரில் முங்கி குளிப்பதால், இந்த நோயின் தாக்கம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. 


சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் நீரில் மூழ்கி குளிக்கும் பொழுது மூக்கிற்குள் நீர் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். இந்த அமீபா மூக்கினில் சென்று விட்டால் நமது கபாலத்திற்கும் மூக்கிற்கும் ஆன இடைப்பகுதியில் தங்கி மெதுவாக முன்னேறுகிறது 


மூளை பகுதிக்கு செல்லும் அமீபா மெதுவாக திசுக்களைத் தின்று நோயின் தன்மையை தீவிரப்படுத்துகிறது. எனவே குளிக்கும்போது குறிப்பாக அசுத்தமான நீர் நிலைகளில் மிக மிக கவனமாக இருப்பது நல்லது.


அறிகுறிகள்:




அமீபா அடங்கிய நீர்நிலைகளில் குளிக்கும் பக்தர்கள், பொதுமக்கள் உடலில் சென்று விட்டால் மூன்று நாட்களுக்குப் பிறகு கழுத்து இறுக்கம், வாந்தி, மயக்கம், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படுகிறது. இது கொரோனா போன்ற தொற்று இல்லை என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே அந்த வகையில் இது மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்குப் பரவாது என்பது மகிழ்ச்சியான தகவல்.


தற்காப்பு அவசியம்:


தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளது. எனவே கேரளா செல்லும் பக்தர்கள் தேங்கிய நீர்நிலைகளில் குளிக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீரில் உள்ள வெப்பநிலை அமீபா வாழ்வதற்கு சாதகமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


பம்பா உள்ளிட்ட ஆறுகளில் குளிக்கும்போது மூக்கினுள் நீர் நுழையாமல் கவனமாக இருக்க வேண்டும். தங்களுடைய மருத்துவ ஆவணங்களையும் மருந்துகளையும் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும். கொதிக்க வைத்து ஆறிய நீரை குடிப்பது நல்லது.


சுகாதாரத் துறை நடவடிக்கை:


தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை கேரளா எல்லையில் மற்றும் தமிழ்நாட்டிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தங்கும் விடுதிகளில் நீர்நிலைகளில் குளோரினேசன் செய்யும் நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 


இவ்வகையான அமீபா காய்ச்சலுக்கு மாற்று மருந்து உண்டு என்றும் சுகாதாரத் துறை விளக்கியுள்ளது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், அனைத்து பைவ் ஸ்டார் ஹோட்டல்களிலும் உள்ள நீச்சல் குளங்கள் குளோரினேசன் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். 


இது வைரஸ் பாக்டீரியா போன்ற வகையைச் சார்ந்த காய்ச்சல் என்பதால் மருத்துவர்களுக்கும் சரியாக கணிப்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.


கேரளாவில்தான் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரை 18 பேர் இந்த நோயின் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பக்தர்கள் அனைத்து எச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்கும்படி சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


உரிய பாதுகாப்புடன் செல்லுங்கள், போகும் இடங்களில் நீர் நிலைகளில் புழங்கும்போது கூடுதல் கவனமாக இருங்கள்.. மற்றபடி எந்தப் பயமும் இல்லாமல் சபரிமலை அய்யப்பனை சந்தோஷமாக தரிசித்து விட்டு வாங்க.


(சென்னையைச் சேர்ந்த சரளா ராம்பாபு, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு

news

தொடர்ந்து 4வது நாளாக சரிந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,120 குறைவு!

news

தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளா.. 2026ல் வரிசையாக களை கட்டப் போகும் சட்டசபைத் தேர்தல்கள்

news

இது தியாகம்.. டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தீவிரவாதி டாக்டர் உமர் பரபரப்பு வீடியோ

news

கார்த்திகை மாத சிவராத்திரி.. நாளை கார்த்திகை அமாவாசை.. அடுத்தடுத்து சிறப்பு!

news

சபரிமலை பக்தர்களே.. மூளை தின்னும் அமீபா அச்சுறுத்தல்.. இதைக் கடைப்பிடிங்க போதும்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 18, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்

news

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்...எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

news

சவுதி அரேபியாவில் கோர விபத்து...42 இந்தியர்கள் பலியான துயரம்

அதிகம் பார்க்கும் செய்திகள்