- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: என்னப்பா இது பிரேக்பாஸ்ட் எல்லாம் முடிச்சு வேலையும் ஆரம்பிச்சாச்சு.. இப்ப வந்து பிரேக்பாஸ்ட் ரெசிப்பி சொல்றீங்கன்னு கேக்காதீங்க சிஸ்டர்ஸ்.. இதை நாளைக்கு செஞ்சு பாருங்க.. இல்லாட்டி செவ்வாய்க்கிழமை பண்ணிப் பாருங்க.. அம்புட்டு டேஸ்ட்டா இருக்கும்.
மொறு மொறு தோசைக்கும் மல்லிப்பூ இட்லிக்கும், சூடான சாதத்திற்கும் இந்த கத்திரிக்காய் பீர்க்கங்காய் கொத்சு செம மேட்ச்சாக இருக்கும். அதேபோல கர்ப்பிணிப் பெண்களுக்கும் ரொம்பப் பிடிக்கும். வீட்ல யாராவது முழுகாம இருந்தா செஞ்சு கொடுங்க, ருசிச்சு சாப்டுவாங்க.
சரி வாங்க ரெசிப்பியைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் - 4 (கழுவி கட் செய்யவும்- தண்ணீரில் போடவும்)
பீர்க்கங்காய் - ஒரு சிறிய கப் (தோல் நீக்கி கட் செய்தது)
சின்ன வெங்காயம் - 10
(அல்லது) பெரிய வெங்காயம் - 2 (கட் செய்யவும்)
பூண்டு - ஆறு பல்
சீரகம் - ஒரு ஸ்பூன்
வர மிளகாய் - 3 பிளஸ் 2
பச்சை மிளகாய் ஒன்று
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு உளுத்தம் பருப்பு - (தாளிக்க) ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை மல்லித்தழை - ஒரு கைப்பிடி
தக்காளி - 3 (கட் செய்யவும்)
உப்பு புளி காரம் - தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப
செய்முறை
1. கத்திரிக்காய் + பீர்க்கங்காய் + சின்ன வெங்காயம் + பூண்டு + தக்காளி + வர மிளகாய் மூணு + சீரகம் + ஒரு கப் தண்ணீர் இவை அனைத்தும் குக்கரில் போட்டு இரண்டு விசில் விடவும்
2. ஆறிய பின் தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் பல்ஸ் மோடில் ஒன்று அல்லது இரண்டு டைம் போடவும் (மல்லித்தழை சேர்த்து)
தாளிப்பு - எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை வடகம் இருந்தால் போட்டு தாளிக்கவும். அதில் சீரகம் வரமிளகாய் போடவும் (இது டெக்கரேஷனுக்கும் சுவைக்கும்)
3. அதே வானலியில் மிக்ஸி கலவை + தண்ணீர் (மீதம் இருந்தால்ஃ ஊற்றி கிளறவும்.. சூப்பரா கொத்சு ரெடி
புளி, தேவைப்பட்டால் சேர்க்கவும்... அது கட்டாயம் கிடையாது, உங்க விருப்பம்தான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கம்பனும் கவியும்
வாழும் வரையில்.. வகை தொகையில்லாமல்.. வரிகளைக் கொட்டிய. வாலிபக் கவி!
என் இராமனே!
கொழுக்கட்டை
ஆண் பூ
முகத்தில் முகம் பார்க்கலாம்
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!
Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!
{{comments.comment}}