Breakfast recipe.. வரகு பொங்கலும் தேங்காய் மல்லி சட்னியும்.. செம காம்போ.. சுப்ரீம் ஹெல்த்தி உணவு!

Nov 23, 2024,03:39 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை: எப்பப் பார்த்தாலும் அரிசி அரிசின்னே ஓடிட்டிருக்கீங்களே.. அட அதை கொஞ்சம் அப்படியே வைங்க.. சிறு தானியங்களை கொஞ்சம் சாப்பிட ஆரம்பிங்க.. உடம்புக்கும் நல்லது, ஆரோக்கியமும் சூப்பராக மேம்படும். அப்படிப்பட்ட ஒரு சிறந்த சிறு தானிய உணவுதான் இந்த வரகு பொங்கல். இதுக்கு தேங்காய் மல்லி சட்னி செமத்தியான காம்போ. 


சரி இதை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க.


வரகு பொங்கல்




தேவையான பொருட்கள் 


வரகு அரிசி - ஒரு கப் 

பாசிப்பருப்பு  - ஒரு கப் (இரண்டையும் லேசாக வறுத்து கழுவவும்)

 சீரகம் - ஒரு ஸ்பூன் 

மிளகு - ஒரு ஸ்பூன் 

இஞ்சி பூண்டு - ஒரு ஸ்பூன் கட் செய்தது பொடியாக 

முந்திரி - 10

நெய் - 2 ஸ்பூன் 

கறிவேப்பிலை - இரண்டு ஈக்கு 


சட்னி (உப்பு காரம் தேவைக்கு ஏற்ப)


தேங்காய் துருவல் - ஆறு ஸ்பூன் 

உடைத்த கடலை - நாலு ஸ்பூன்

மல்லித்தழை - ஒரு கைப்பிடி (கழுவி கட் செய்க)

பச்சை மிளகாய் - 3

இஞ்சி பூண்டு - அரை ஸ்பூன் கட் செய்தது


இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் தண்ணீர் விட்டு அரைக்கவும். சூப்பர் சட்னி ரெடி.


பொங்கல் செய்முறை


1. வரகு + பாசிப்பருப்பு அதற்கு நாலரை கப் தண்ணீர் ஊற்றி (அளவுக்கு ஒரே கப் வைத்துக் கொள்ள வேண்டும்). 


2. சீரகம் மிளகு கறிவேப்பிலை சேர்த்து கொதி வர வேண்டும் 


3. இஞ்சி பூண்டு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விசில் விடவும் (கமகமன்னு இருக்கா..!)


4. பிரஷர் அடங்கியதும் நெய்யில் முந்திரி வறுத்து பொங்கல் உடன் கிளறவும். இப்போ பொங்கல் ரெடி


பலன்கள் 


1. வரகு அரிசியில் கோதுமையை விட நார்ச்சத்து அதிகம் மாவுச்சத்து இதில் குறைவு.


2. ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது.


3. வெயிட் லாசுக்கு ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய அடிக்கடி இதனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்


4. நல்ல பில்லிங் ஆன உணவு. 


5. குடல் புண் குணமாகும் மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும்.


6. இரும்பு சத்து வைட்டமின்கள் பாஸ்பரஸ் கால்சியம் தாது உப்புக்கள் நிறைந்தது இதயம் பலப்பட்டு இதய ஆரோக்கியம் மேம்படும்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

news

ஓபிஎஸ் டெல்லி விசிட்...பாஜக., தலைவர்களுடன் சந்திப்பு...டெல்லியில் என்ன நடக்கிறது?

news

அவசரப்பட்டு துணியை துவைச்சிராதீங்க.. இன்னும் முடியல.. மழை தொடரும்...இந்திய வானிலை மையம் தகவல்!

news

ரஷ்ய அதிபரின் டெல்லி வருகை...தாறுமாறாக ஏறிய ஹோட்டல் கட்டணங்கள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 04, 2025... இன்று நம்பிக்கை அதிகரிக்கும் நாள்

news

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உடல் நலக்குறைவால் காலமானார்

news

குடும்பங்களுக்கு வருமானத்தை ஈட்டி தரும் வீட்டுக்கூரை சூரிய மின்சக்தி திட்டம்

news

ஈரோட்டில் வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன் மூச்சு திணறி பலி!

news

வருகிறார் வா வாத்தியார்.. ரீலீஸ் தேதி அறிவிப்பு.. 3வது லிரிக்கல் வீடியோவும் வெளியானது

அதிகம் பார்க்கும் செய்திகள்