Window Seat: விண்டோ சீட் கேட்டு வாங்கி.. கடைசியில் ஜன்னாலே இல்லாட்டி எப்புடிப்பா!

Feb 09, 2023,10:03 AM IST
டெல்லி: விண்டோ சீட்.. இந்த வார்த்தையைக் கேட்டாலே பலருக்கும் காதில் ஹெட்போன் மாட்டி அனிருத் பாட்டு கேட்கும் ஞாபகம் வந்து விடும். ஆனால் விண்டோ சீட்டுக்காக தனியாக டிக்கெட் புக் பண்ணி கடைசியில் அந்த இடத்தில் ஜன்னலே இல்லாமல் ஏமாந்து போயுள்ளார் ஒருவர்.



விண்டோ சீட்.. அதாங்க ஜன்னலோர சீட்.. இதைப் பிடிக்க பஸ் ரயில்களில்தான் அடித்துக் கொள்வார்கள் என்றில்லை.. விமானத்திலும் கூட இதே அக்கப்போர்தான். சமீபத்தில் கூட பிரேசிலில் ஜன்னலோர சீட்டுக்காக 15 பெண்கள் கூடி சரமாரியாக அடித்து ஜாக்கெட் கிழிந்து, தலைமுடி கொத்தாக பிய்ந்து கொண்டு போன கதையைப் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்னொரு விண்டோ சீட்  கூத்து நடந்துள்ளது. ஆனால் பயப்படாதீர்கள்.. இது ஜாலியான கதைதான்.

அனிருத் மிட்டல் என்பவர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விமானத்தில் ஒரு டிக்கெட் எடுத்துள்ளார். ஜன்னலோர சீட்  வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுள்ளார். வேற சீட்டெல்லாம் வேண்டவே வேண்டாம் என்று கூறி வேண்டி விரும்பி ஒரு ஜன்னலோர சீட்டைப் பிடித்து விட்டார். இதற்காக எக்ஸ்ட்ராவாகவும் அவர் செலவிட்டதுதான் ஹைலைட்.

ஜன்னலோரமாக அமர்ந்து வானத்தை வேடிக்கை பார்த்தபடி.. பாட்டுக் கேட்டபடி.. உலகை ரசித்தபடி லண்டன் போகப் போகிறோம் என்று செம குஷியாக விமானத்துக்கு வந்தவர் அப்படியே வடிவேலு மாதிரி ஷாக்காகி விட்டார். ஏன்னு கேட்கறீங்களா.. மிட்டலுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுக்கு பக்கத்தில் ஜன்னலே கிடையாது.. அவருக்கு முந்தைய வரிசையிலும், பின்னாடி உள்ள வரிசையிலும் ஜன்னல் இருந்தது. ஆனால் இவர் இருந்த வரிசையில் ஜன்னலே இல்லை.

எப்படி இருக்கும் மிட்டலுக்கு.. அப்படியே பக்கென்று ஆகி விட்டதாம். இதை உடனடியாக ஒரு போட்டோ எடுத்து தனது சொந்தக் கதை சோகக் கதையை சமூக வலைதளத்தில் போட வந்து குவிந்து விட்டன கமெண்ட்டுகள். விண்டோ இருந்தாலும் சண்டை.. இல்லாட்டியும் சோகம்..!

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்