டில்லி : வணிக உபயோகத்திற்கான எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை ரூ.7 குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இன்று பார்லிமென்ட்டில் 2025-2026ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் என்னென்ன அறிவிப்புகள் வரப் போகிறது என அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வணிக உபயோகத்திற்கான 19 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.7 குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டில்லியில் ஒரு வணிக சிலிண்டரின் விலை ரூ.1797 ஆக குறைந்துள்ளது.

ஒரு வணிக சிலிண்டரின் விலை ரூ.1749 முதல் ரூ.1959 வரை விற்கப்பட்டு வந்தது. தற்போது இந்த விலையில் திடீரென ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய பட்ஜெட்டில் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக இந்த விலை குறைப்பு நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள் போன்றவற்றில் கம்ரஷியல் சிலிண்டர்கள் தான் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கமர்ஷியல் சிலிண்டர் விலை அடுத்தடுத்து ஐந்து முறை குறைக்கப்பட்டுள்ளதால் ஓட்டல்களில் சாப்பாடுகளின் விலையிலும் மாற்றம் வரலாம் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் இன்று பட்ஜெட்டில் எந்த மாதிரியான அறிவிப்புகள் வருகின்றன என்பதை பொருத்தே இனி வரும் நாட்களில் ஓட்டல்களில் விலை அமையும் என சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
No Sunday leave for Women: தினம்தினம் தொடர்கதையே!
தென்றலுடன் கலந்த தேனிசைத் தேவா
தேனிசை ஓய்ந்தது… நினைவுகள் ஓயவில்லை!
ஆனந்தம் அமைதி வேண்டுமென்றால் ..!
வைத்தியம் - ஒரு நிமிடக் கதை (39)
சிறகை விரி.. வா சேர்ந்து பறப்போம்!
தேவாதி தேவா.. தெருவோர கானாவை தேனாக்கியவரே!
3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட.. கோயம்பேடு ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
{{comments.comment}}