நவம்பர் மாதமே வருக வருக.. 30 நாட்கள் கொண்ட நான்கு மாதங்களில்.. கடைசி மாதம்!

Oct 31, 2025,12:47 PM IST

- ஸ்வர்ணட்சுமி


நவம்பர் மாதம் நாளை பிறக்கவுள்ளது. ஒரு வருடத்தில் 30 நாட்கள் கொண்ட மாதங்கள் நான்கு உள்ளன. அதில் நான்காவது மற்றும் கடைசி மாதம் எனும் சிறப்பு நவம்பர் மாதத்திற்கு உள்ளது. 


யூலியன்  மற்றும் கிரகொரியன் நாட்காட்டிகளில் நவம்பர் மாதம் பதினோராவது மாதம் ஆகும். நவம்பர் மாதத்தின் ஆரம்பம் பொதுவாக ஐப்பசி மாதத்திலும் நவம்பர் மாதத்தின் இறுதி பகுதி கார்த்திகை மாதத்திலும் வரும். ஆன்மீக ரீதியாகவும் இம்மாதம் சிறப்பானது. 


சிவன், முருகன், ஐயப்ப பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து  கொண்டாடும் மாதம் நவம்பர் மாதம் ஆகும். ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கார்த்திகை மாதம் சபரிமலைக்கு செல்லும் சிறப்பிற்குரியது.


பெயர் காரணம் :




ரோமானிய காலண்டர் என்பது மார்ச் மாதத்தில் துவங்குவதால் ஒன்பதாவது மாதமாக வரும் இந்த மாதத்திற்கு நவம்பர் என பெயரிட்டனர். (Novem - Nine). இது மழைக்காலம் குளிர் காலம் இரண்டும் கலந்த காலநிலையுடன் காணப்படும் மாதம் ஆகும்.


ஆன்மீக ரீதியில் ஒவ்வொருவர் வாழ்விலும் பாவங்கள் நீங்கி, புண்ணியங்கள் அதிகம் சேர்க்கும் மாதமாகவும், முக்கிய நிலை உயர்ந்த நிலை அடையும் மாதமாக நவம்பர் மாதம் கருதப்படுகிறது. சிவ வழிபாடும் கார்த்திகை மாதத்தில் ஐயப்ப வழிபாடும் செய்யும் அற்புதமான மாதம்.




நம்பர் 01- சனிக்கிழமை: தேவ் உத்தானி  ஏகாதசி -  விஷ்ணு பகவான் தனது அண்ட தூக்கத்திலிருந்து விழித்தெழுவதை குறிக்கிறது. பக்தி தூய்மை மற்றும் தெய்வீக தொடர்பை வலியுறுத்தி புதிய முயற்சிகளை தொடங்குவதற்கு இது ஒரு நல்ல நாள்.

நவம்பர் 02 - துளசி  விவா புனிதமான துளசி செடி& விஷ்ணுவுடன் திருமணத்தை குறிக்கிறது.

நவம்பர் 3 -தேசிய சாண்ட்விச் தினம்.

நவம்பர் 05 - மகா அன்னாபிஷேகம் . குருநானக் ஜெயந்தி. சீக்கிய மதத்தின் குருவின் பிறந்தநாள்.

நவம்பர் 12 -காலபைரவர் ஜெயந்தி. சிவபெருமானின் உக்கிர வடிவம் ஆன காலபைரவரின் பிறந்த நாள்.

நவம்பர் 14-   ஜவஹர்லால் நேருஜியின் பிறந்த நாளான குழந்தைகள் தினம். (Children's Day).

நவம்பர் 15 - ஏகாதசி.


நவம்பர் 2025மாத விரத நாட்கள் :


நவம்பர் 05 - பௌர்ணமி 

நவம்பர் 06 - கிருத்திகை

நவம்பர் 01 &15 -ஏகாதசி 

நவம்பர் 08 -சங்கடஹர சதுர்த்தி.

நவம்பர் 03& 17- பிரதோஷம்.

நவம்பர்18 -சிவராத்திரி 

நவம்பர் 24 - சதுர்த்தி

நவம்பர் 10 &26 - சஷ்டி 


வளர்பிறை முகூர்த்த நாட்கள்: நவம்பர் 03,23,27,30.


தேய்பிறை முகூர்த்த நாட்கள் : நவம்பர் 10, 16,


மேலும் இன்று பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை

news

எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு

news

Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா த‌வெக?

news

ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!

news

மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!

news

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு

news

மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!

news

தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!

news

மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!

அதிகம் பார்க்கும் செய்திகள்