டெல்லி: சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக வெள்ளிக்கிழமை பதவி ஏற்றார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் 67 வயதான ராதாகிருஷ்ணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த பிறகு வெளியில் அதிகம் காணப்படாத ஜெகதீப் தன்கர் இந்த விழாவில் கலந்து கொண்டார். சிவப்பு குர்தா அணிந்த ராதாகிருஷ்ணன் கடவுளின் பெயரில் ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றார். ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலில் பி. சுதர்சன் ரெட்டியை 152 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததால் இந்த தேர்தல் நடத்தப்பட்டது. ராதாகிருஷ்ணன் இதற்கு முன்பு மகாராஷ்டிராவின் கவர்னராக இருந்தார்.
தமிழ்நாட்டிலிருந்து துணை ஜனாதிபதியாகியுள்ள 3வது தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆவார். இதற்கு முன்பு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் துணை ஜனாதிபதியாக இருந்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர். முன்னாள் துணை ஜனாதிபதிகள் ஹமீத் அன்சாரி, வெங்கையா நாயுடு ஆகியோரும் வந்திருந்தனர்.
கடந்த மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் தன்னை "சமரசம் இல்லாத தேசியவாதி" என்று அழைத்தார். தனது தாயார் சத்ரபதி சிவாஜி மகாராஜின் கதைகளை கூறியதாக தெரிவித்தார். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை பாராட்டிய அவர், அவர் இந்தியாவிற்கு அரசியலமைப்பை வழங்கினார் மற்றும் சமூக தீமைகளை எதிர்த்து தைரியமாக போராடினார் என்றார். "சத்ரபதி சிவாஜி வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்தார், அம்பேத்கர் ஒடுக்குமுறையை எதிர்த்தார். இத்தகைய தொலைநோக்கு பார்வையாளர்கள் இருந்ததால்தான் இந்தியா ஜனநாயக நாடாக உள்ளது. ஆனால் பாகிஸ்தான் அதை தக்கவைக்க போராடுகிறது" என்று அவர் கூறினார்.
ராதாகிருஷ்ணன் முன்பு ஜார்கண்ட் கவர்னராக இருந்தார். தெலுங்கானா மற்றும் புதுச்சேரிக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தார். மகாராஷ்டிரா எப்போதும் தனக்கு சிறப்பானதாக இருக்கும் என்று அவர் கூறினார். "நான் இங்கு இருந்தபோது எனக்கு கிடைத்த அன்பு, ஒத்துழைப்பு மற்றும் நட்புக்காக மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மகாராஷ்டிரா மற்றும் அதன் மக்கள் பற்றிய இனிமையான நினைவுகளை நான் எடுத்துச் செல்கிறேன்" என்று அவர் கூறினார்.
ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிராவில் கவர்னராக இருந்தபோது இரண்டு முதலமைச்சர்களுடன் பணியாற்றினார். ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருடன் அவர் பணியாற்றியுள்ளார்.
கொடுமுடி கோவிலும்.. புராண வரலாறும், காவிரி ஆறும் அகத்தியரும்!
விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!
வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்
அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!
அதிரடியாக புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை... சவரனுக்கு 82,000த்தை நெருங்கியது!
சென்னை போத்தீஸ் ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் திடீர் ஐடி ரெய்டு!
துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை
ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 12, 2025... இன்று அன்பு பெருகும்
{{comments.comment}}