திருவனந்தபுரம்: கேரளாவில் ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை வைக்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தினை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளுக்கு வரும் அரிசி மானியமாக மத்திய அரசால் கொடுக்கப்படுவதால் தான் பிரதமர் படம் வைக்க பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளின் முன்னர் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்த முடியாது என்று சட்டப்பேரவையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் வைக்க வேண்டும் என்று மாநில உணவுத்துறை செயலருக்கு, மத்திய உணவுத்துறை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து கேரளா சட்டசபையில் பேசிய அமைச்சர் ஜி.ஆர்.அனில் பேசுகையில், 14,000 ரேஷன் கடைகளில் பிரதமர் புகைப்படமும், 550 ரேஷன் கடைகளில் பிரதமன் செல்ஃபி பாயின்ட்களை நிறுவவும் அறிவுறுத்தல் வந்துள்ளது என்றார்.
இது குறித்து ஐ யூ எம் எல் அப்துல் ஹமீது எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் பிரனாயி விஜயன். மத்திய அரசின் உத்தரவை ஏற்கப்போவதில்லை. இது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு யுத்தியாகவே நாங்கள் பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை அணுகுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}