திருச்சி: திருச்சி கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் மீது வேகமாக சென்ற கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த கணவன் மனைவி, சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் மீது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் 50 அடி பள்ளத்தில் விழுந்தது. கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பை உடைத்துக் கொண்டு விழுந்துள்ளது. பள்ளத்தில் விழுந்த கார் அப்பளம் போல் நொருங்கியது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த தம்பதிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். உயிர் இழந்த இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

கேரளாவை சேர்ந்த ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவி இருவரும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. இச்சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தில் உயிர் இழந்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}