சந்திரயான் 3 பற்றி கார்ட்டூன்.. பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு

Aug 23, 2023,10:09 AM IST
பாகல்கோட் : சந்திரயான் 3 விண்கலம் பற்றி ட்விட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் கார்டூன் வெளியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பி உள்ள சந்திரயான் 3 விண்கலம் ஆகஸ்ட் 23 ம் தேதி மாலை நிலவில் தரையிறங்க உள்ளது. நிலவில் நிலப்பரப்பில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க போகும் அந்த தருணத்தை உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

நிலவை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா அனுப்பிய லூனா 25 திட்டம் தோல்வி அடைந்து விட்டதால் தற்போது ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனமும் இந்தியா பக்கம் திரும்பி உள்ளது.   இந்நிலையில் 2 நாட்களுக்கு முன், ஒருவர் டீ ஆத்தும் கார்டூன் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், சந்திரயான் 3 அனுப்பிய முதல் போட்டோ என கேப்ஷன் பதிவிட்டிருந்தார். 

பிரகாஷ் ராஜின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரகாஷ் ராஜிற்கு விஞ்ஞானம், அறியவில், அரசியல் என்றால் என்னவென்று பாடம் எடுக்க துவங்கி விட்டனர்.  தனக்கு எதிர்ப்பு வலுத்ததை அடுத்து தன்னுடைய போஸ்டிற்கு விளக்கம் அளித்து மீண்டும் ஒரு போஸ்ட் போட்டார் பிரகாஷ் ராஜ். அதில், ஆம்ஸ்டிராங் நிலவில் கால் வைத்தபோது வந்த ஜோக் இது. அந்த ஜோக்கைத்தான் பகிர்ந்தேன். ஒரு ஜோக்கை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் அதை தவறாக நீங்கள் புரிந்து கொண்டால் நான் என்ன செய்ய என குறிப்பிட்டிருந்தார். 

இதற்கும் நெட்டிசன்கள் கடும் கோபத்துடன் கருத்து தெரிவித்தனர். நாட்டின் வரலாற்று சாதனை உங்களுக்கு ஜோக் செய்கிற விஷயமா என கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில் சந்திரயான் 3 திட்டத்தை கேலி செய்யும் விதமாக கார்டூன் வெளியிட்டதாக கூறிற்காக கர்நாடகாவின் பகல்கோட் மாவட்ட போலீஸ் ஸ்டேஷனில் பிரகாஷ் ராஜிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து அமைப்புக்களைச் சேர்ந்த தலைவர்கள் அளித்த புகாரின் பேரில் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்