பெங்களூரு: இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றி வந்த, தலித் வகுப்பைச் சேர்ந்த ஊழியரை பொய்யான வழக்கில் சிக்க வைத்ததாக எழுந்த புகாரின் பேரில் இன்போசிஸ் இணை நிறுவனர் கிறிஸ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 18 பேர் மீது பெங்களூரு போலீஸார் எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கிறிஸ் கோபாலகிருஷ்ணன் தவிர வழக்குத் தொடரப்பட்டுள்ள மற்றவர்கள் விவரம் - முன்னாள் இந்திய அறிவியல் கழக இயக்குநர் பலராம், கோவிந்தன் ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியர், சந்தியா விஸ்வநாத், ஹரி கே வி எஸ், தாசப்பா, பி. பலராம், ஹேமலதா மகிஷி, சட்டோபாத்யாயா, பிரதீப் சவ்கர், மனோகரன் உள்ளிட்டோர்.
என்ன பிரச்சினை?

துர்கப்பா என்பவர் இந்திய அறிவியல் கழகத்தின் மாற்று எரிபொருள் தொழில்நுட்ப மையத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த போவி சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் மீது கடந்த 2014ம் ஆண்டு பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்டதாக ஒரு புகார் எழுந்தது. இதையடுத்து அவர் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்த நிலையில் தன் மீது பொய்யான புகாரைச் சுமத்தியதாகவும், ஜாதிப் பெயரைச் சொல்லி அவமானப்படுத்தியதாகவும், மிரட்டியதாகவும் கூறி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த கோர்ட், புகாரில் முகாந்திரம் இருப்பதாக கூறி இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சதாசிவ நகர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் கழகத்தின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?
2026 புத்தாண்டில் தமிழக அரசியல் எப்படி இருக்கும்? ஒரு அலசல்
{{comments.comment}}