குண்டூர்: டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த நிலையில், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டபல்லா கிராமத்தை சேர்ந்த ஓய்.எஸ்.ஆர்.சி.பி தொண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக ஜெகன்மோகன் ரெட்டி நேற்று நேரில் வந்தார். அப்போது ஜெகன்மோகன் ரெட்டி காரை தொடர்ந்து தொண்டர்கள் கூட்டத்தில், செவி சிங்கையா (55) என்பவர் தவறி விழுந்து, கார் சக்கரத்தில் சிக்கினார்.

இதனையடுத்து சிங்கையாவை போலீசாரும், ஓய்.எஸ்.ஆர்.சி.பி ஆதரவாளர்களும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே சிங்கையா உயிரிழந்தார். இந்த நிலையில், சிங்கையா ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கியதும், இந்த சம்பவத்தை கவனிக்காமல் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி தொண்டர்களை பார்த்து கையை அசைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது.
இந்நிலையில், உயிரிழந்த தொண்டரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், ஜெகன்மோகன் ரெட்டி, கார் ஓட்டுநர் ரமணா ரெட்டி, முன்னாள் எம்பி சுப்பா ரெட்டி உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காதலை மட்டும்...கட்டுப்படுத்த முடியலையே!
உசுரே நீதானே ஒறவாய் வருவேனே..
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
{{comments.comment}}