மதுரை: கல்குவாரி வெடி விபத்தில் பாதுகாப்பு இல்லாமல் வெடி பொருட்களை இறக்கியாதால் தான் வெடி விபத்து நடந்துள்ளதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியானதால் அங்கு பரபரப்பானது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் அருகே ஆர்எஸ்ஆர் கல்குவாரியில் உள்ள பாறைகளை உடைக்க பயன்படுத்துவதற்காக வெடி பொருட்கள் இறக்கப்பட்டது. அந்த வெடி பொருட்கள் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் வெடி பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் உடல் சிதறி இறந்தனர்.

இந்த வெடி விபத்தின் எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆட்சியர் உத்தரவின் பேரில் தீயணைப்புத்துறை, காவல்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் கல்குவாரிகளில் ஆய்வு செய்தனர். இதில், எலக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்த வெடிமருந்து வேனையும், நைடெரேட் மிக்சர் வெடிமருந்து இருந்த லோடையும் அருகருகே வைத்து பாதுகாப்பு இல்லாமல் இறக்கியதால் தான் வெடி விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், "மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிந்தும், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் கொடுக்காமல், எலக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்த வெடிமருந்து வேனையும், நைடெரேட் மிக்சர் வெடிமருந்து இருந்த லோடு வேனையும் அருகருகே வைத்து வெடிமருந்துகளை இறக்கியுள்ளனர். வெடிவிபத்து ஏற்பட்டு உயிர் சேதத்தை விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும் அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் இருந்து வேலை செய்ததால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
வெடிமருந்துகளை கையாள போதிய பாதுகாப்பு செய்து கொடுக்காமல் வெடிமருந்து குடோனை முறையாக நிர்வகித்துள்ளனர் " என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெடிவிபத்து நிகழ்ந்த குவாரியில் சிதறிகிடக்கும் வெடிமருந்துகளை செயலிழக்க செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}