பராசக்தி படத்தில் அறிஞர் அண்ணாவின் முழக்கங்கள் நீக்கம்...சென்சார் போர்டு அதிரடி

Jan 09, 2026,04:22 PM IST

சென்னை : சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. தணிக்கை வாரியத்தின் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் இணையதள கசிவுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவு என இப்படம் தற்போது செய்திகளில் இடம்பிடித்துள்ளது.


தமிழகத்தில் பொங்கல் ரிலீசாக அதிக எதிர்பார்ப்புகளுடன் ஜனவரி 10 ம் தேதி பராசக்தி படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று காலை தான் படத்திற்கு யு/ஏ சான்றி வழங்கி, படத்தின் ரிலீசுக்கு சென்சார் போர்டு அனுமதி அளித்துள்ளது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC), இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், படத்தில் மொத்தம் 25 இடங்களில் திருத்தங்கள் மற்றும் மாற்றங்களைச் செய்ய உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாதுரை தொடர்பான வசனங்கள் மற்றும் அரசியல் ரீதியான கருத்துக்களுக்கு கத்திரி போடப்பட்டுள்ளது.


பராசக்தியில் நடந்த திருத்தங்கள் :




- அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற புத்தகத் தலைப்பான 'தீ பரவட்டும்' என்ற வாசகம், தணிக்கை குழுவின் அறிவுறுத்தலின்படி 'நீதி பரவட்டும்' என மாற்றப்பட்டுள்ளது.

- "இந்தி என் கனவை அழித்தது" என்ற வாக்கியமும், "இந்தி அரக்கி" என்ற சொல்லும் படத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.


- "இங்கே யார் ஆண்டாலும், தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற நினைத்தால் ஒரு போராட்டம் எழும் என்ற அச்சம் இருக்கும் வரை அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்" என்ற வசனத்தையும் நீக்க தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது.


அரசியல் ரீதியாகத் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய பல வசனங்கள் நீக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.


மற்றொரு முக்கிய நிகழ்வாக, 'பராசக்தி' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. சமீபகாலமாகப் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியான சில மணிநேரங்களிலேயே திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாகி தயாரிப்பாளர்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனைத் தடுக்கும் பொருட்டு, இப்படத்தை ஆயிரக்கணக்கான சட்டவிரோத இணையதளங்களில் வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தின் காப்புரிமையைப் பாதுகாக்கவும், திரையரங்கு வசூலைப் பாதிக்காமல் இருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


'சூரரைப் போற்று' படத்திற்குப் பிறகு அதிகம் எதிர்பார்ப்பை கிளப்பிய சுதா கொங்கரா இயக்கும் படம் என்பதாலும், சிவகார்த்திகேயன் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தணிக்கை குழுவின் இத்தனை மாற்றங்களுக்குப் பிறகு படம் எவ்வாறு அமையப் போகிறது என்பதைப் பார்க்க திரையுலகமே காத்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் வராது... சென்சார் வழக்கு ஜனவரி 21க்கு ஒத்திவைப்பு

news

முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிய டாக்டர் ராமதாஸ்... திமுக பக்கம் டேக் டைவர்ஷன் எடுக்கத் திட்டமா?

news

தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்

news

தேசியக் கட்சிகள் இல்லாமல் திராவிடக் கட்சிகளால் ஜெயிக்க முடியாதா??

news

பிறப்பு முதல் இறப்பு வரையிலான 50 வகையான அரசு சேவைகள்... இனி வீட்டிலிருந்தே பெறலாம்

news

நெருக்கடியை சந்திக்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள்...கனத்த மெளனம் காக்கும் திரையுலகம்

news

நாம் சுவைக்க மறந்த வேர்க்கடலை சட்னி.. அதுக்குப் பின்னாடி இருந்த பாலிட்டிக்ஸ் தெரியுமா?

news

ஆஸ்கார் ரேசில் 'டூரிஸ்ட் ஃபேமிலி'...மேலும் 5 இந்திய படங்களும் இருக்கு

news

சின்னச் சின்னதா மாறுங்க.. ஹெல்த்தி ஆய்ருவீங்க.. Stay Healthy With Small Changes!

அதிகம் பார்க்கும் செய்திகள்