டெல்லி: வருடத்திற்கு ஒரு முறை ரூ.3000 செலுத்தினால் போதும், வருடம் முழுவதும் எந்த சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்த தேவையில்லை. இந்த புதிய திட்டம் மத்திய அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் குறித்து ஏகப்பட்ட புகார்கள், கோபங்கள், வருத்தங்கள், அதிருப்திகள் மக்களிடையே உள்ளன. அதிகமான டோல்கேட்கள் உள்ளன. அருகருகே உள்ளன, அதிக கட்டணம் கட்ட வேண்டியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அடிக்கடி சுங்கச்சாவடிகளில் பயணம் செய்பவர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தனிநபர் வாகன உரிமையாளர்கள் ரூ.3000 மட்டும் செலுத்தி விட்டு ஓராண்டிக்கான டோல்கேட் பாஸை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த ஓராண்டிற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் டோல்கேட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல கார் உரிமையாளர்கள் 15 ஆண்டுகளுக்கு ரூ.30 ஆயிரம் கட்டணமாக செலுத்திவிட்டு லைஃப் டைம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த புதிய திட்டம் தொடர்பாக தற்போது தீவிர ஆலோசனைகள் தொடங்க உள்ளன.
இது குறித்து பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், கார் உரிமையாளர்களுக்கு சுங்க கட்டண செலவை குறைப்பதற்காக பாஸ் நடைமுறையை கொண்டு வருவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும், ஓரண்டு மற்றும் 15 ஆண்டுகளுக்கான பாஸ்களை வழங்குவதன் மூலம் அரசுக்கு எந்த இழப்பீடும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மேகதாது வழக்கு: தமிழக உரிமையை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சி தந்த அதிர்ச்சி!
பல்கலைக்கழக விவகாரம்... நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை மையம் அலர்ட்!
இன்னும் கொஞ்சம் யோசித்தால்.. இயற்கையை நேசித்தால்!
பெற்று வளர்த்த தாய்மடி
மறைத்த அன்பு.. மலரின் வேரில் மறைந்த கதை.. மீண்டும் மங்கலம் (9)
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து.. நவம்பர் 16ல் தவெக போராட்டம்?.. விஜய் வருவாரா??
ரயில் நிலையங்களில் இட்லி சரியில்லையா.. சாம்பார் டேஸ்ட்டா இல்லையா.. QR கோட் மூலம் புகார் தரலாம்
{{comments.comment}}