டெல்லி: ஆண்டுதோறும் ஜூன் 25ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. காரணம், 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதிதான் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை சட்டத்தை (மிசா) பிரகடனப்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அமித்ஷா போட்டுள்ள பதிவில், 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தனது சர்வாதிகார மனப்போக்கால், அவசர நிலை சட்டத்தைப் பிரகடனப்படுத்தி, ஜனாநயகத்தின் ஆத்மாவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். லட்சக்கணக்கான மக்கள் காரணமே இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டனர். மீடியாக்களின் குரல் நெரிக்கப்பட்டது.
இந்த தினத்தை ஆண்டுதோறும் அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார் அமித்ஷா.
கடந்த பத்து வருடமாக இருந்து வரும் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கையில் எடுத்த முக்கியமான குற்றச்சாட்டே அரசியல் சாசனத்திற்குப் புறம்பாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்பதுதான். சமீபத்தில் 3வது முறையாக மோடி அரசு பதவியேற்ற பின்னர், புதிய எம்.பிக்கள் பதவியேற்பின்போது கூட காங்கிரஸ் எம்.பிக்கள் அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டுதான் பதவியேற்றனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் அதே அரசியல் சாசனத்தை பாஜகவும் கையில் எடுத்து காங்கிரஸுக்கு நெருக்கடி தர முனைவதையே இந்த புதிய அரசியல் சாசன படுகொலை தின அறிவிப்பு வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
ஏற்கனவே இந்தியா என்று எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குப் பெயர் வைக்கப்பட்டபோது அதற்கு எதிராக பாஜக தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அவை அப்படியே மறைந்து போய் விட்டன. இந்த நிலையில் காங்கிரஸ் கையில் எடுத்துள்ள அரசியல் சாசன முழக்கத்திற்கு பதிலடியாக பாஜகவும் அரசியல் சாசன படுகொலை என்ற முழக்கத்தை கையில் எடுத்துள்ளது. இது எந்த அளவுக்கு பாஜகவுக்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}