டெல்லி: தமிழ் உள்ளிட்ட 6 இந்திய மொழிகளுக்கு ஏற்கனவே செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 5 மொழிகளுக்கு அந்த அந்தஸ்து தரப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அதில் 2001 ஆம் ஆண்டு கணக்கின்படி 29 மொழிகளை பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் 122 மொழிகளை அதிகமான மக்கள் பேசுகின்றனர். இந்தி, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, பஞ்சாபி, போன்ற மொழிகள் வட மாநிலங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், போன்ற மொழிகள் தென்னிந்திய மக்களால் பேசப்பட்டு வருகிறது. இந்த மொழிகள் தென்னிந்தியாவில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்திய மொழிகளிலேயே மிகவும் பழமையான தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தர வேண்டும் என்று மறைந்த கலைஞர் கருணாநிதி காலத்தில் தீவிரமாக எடுத்த முயற்சியின் விளைவாக அப்போதைய காங்கிரஸ் அரசு தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது. அதைத் தொடர்ந்து சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கும் படிப்படியாக செம்மொழி அந்தஸ்து தரப்பட்டது. தற்போது மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து தரப்பட்டுள்ளது.
அக்டோபர் 3ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவெடுக்கப்ட்டது. இந்திய மொழிகளை பாதுகாத்து மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார். மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமிஸ், பெங்காலி என மேலும் ஐந்து மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி உள்ளது மத்திய அரசு.
மராத்தி மொழி மகாராஷ்டிராவின் பெரும்பான்மை மொழியாகும். விரைவில் மகாராஷ்டிராவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு மராத்தி மொழி பேசுவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}