கவர்மென்ட் நடத்தறீங்களா.. இல்லை.. கந்து வட்டி நடத்தறீங்களா.. சீமான் ஆவேச கேள்வி!

Jan 05, 2024,04:51 PM IST

சென்னை: மாநிலங்கள்தான் மத்திய அரசுக்கு நிதி ஈட்டித் தருகின்றன. மத்திய அரசு தனியாக நிதி ஈட்டுவதில்லை. அப்படி இருக்கும்போது மாநிலங்கள் பேரிடர் காலத்தில் சிரமப்படும்போது நிதி தருவதில் பாரபட்சம் காட்டுவது ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார்.


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் வெள்ள பாதிப்பைப் பார்வையிட தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். மேலும் அதற்கு முன்பு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். அப்போது, தமிழ்நாட்டில் இருந்து பெற்ற வரியை விட மத்திய அரசு கூடுதலாக நிதியை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார். 


2014 முதல் 2023 வரை தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெற்ற வரி ரூ.6.23 லட்சம் கோடி, அதே நேரம் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.6.96 லட்சம் கோடி என்று தமிழகத்தில் இருந்து பெற்றதை விட கூடுதலாக நிதி கொடுத்துள்ளோம் என்று கூறியிருந்தார். அவருக்கு பதில் கூறும் பொருட்டு இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்தார்.




அப்போது அவர் கூறுகையில்,  கவர்மெண்ட் நடத்துறீங்களா.. இல்லை கந்து வட்டி நடத்துறீங்களா? என் வரியை எடுத்துட்டு போயிட்டு ஏன் திருப்பி தர்றே, மாநிலங்களின் நிதி தான் மத்திய அரசு நிதி. எனக்கு ஒரே தாய் தமிழ் தாய். என் நாடு என் மக்கள் என் நிர்வாகம். இதே குஜராத்திலும்,  உத்தர பிரதேசத்திலும் வெள்ளம்  வந்தால்  கேவலமா இப்படியா பேசிட்டு உட்கார்ந்திருப்பீர்கள். உடனே வருவீங்க பறந்து வருவீங்க. அடுத்த நொடி 500 கோடி அறிவிப்பீங்க. அறிவிச்சீங்களா?  இல்லையா? 


நான் ஒரு ரூபாய் கொடுத்தா 40 காசு திருப்பி தருகிறீர்கள். அவன் ஒரு ரூபாய் கொடுத்தால் 3.80 காசு தருகிறார்கள். என் நிலத்தின்  வளத்தை எல்லாவற்றையும் சுரண்டி விட்டீர்கள். இந்தி பேசுபவர்கள் தான் இந்தியர்களா?


பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வந்த அம்மா அவர்கள், சாலையில் ஒரு ஓரத்துல படங்கள் எடுத்துட்டு வந்து அந்த படங்களை பெரிய அளவில் மாட்டி, ஒரு பந்தலை போட்டு அதில் இருந்து பார்த்துட்டுப் போறதுக்கு, அங்கிருந்து வாட்ஸ் அப்பில் அனுப்பி விட்டு இருக்க சொல்லி இருக்கலாமே. எதுக்கு வர்ரீங்க. இதுதான் அவரும் பண்ணாரு. ஒரு இடத்துல படத்தை ஒட்டி வச்சிருந்தாங்க. அவரும் பார்த்துட்டு போயிட்டாரு.


ஈமெயில், இன்ஸ்டாகிராம் இருக்கு, இன்டர்நெட் இருக்கு, வாட்ஸ் அப் இருக்கு. அதுல போட்டு விட சொல்லி பார்க்க வேண்டியது தானே. அங்கிருந்து பார்க்கலாமே. அவங்களுக்கு நாங்க ஒரு உயிரே கிடையாது. நாங்க ஒரு  ஓட்டு அவ்வளவுதான். 


திருச்சி விமான நிலைய விரிவாக்கத்தை திறந்து வச்சுட்டு போனாரு. புதிய முனையத்தை திறந்து வைக்க வர முடிந்த பிரதமர் மோடிக்கு தூத்துக்குடிக்கு வர முடியல. தூத்துக்குடி அழிந்து போனதை பார்வையிட முடியல. மக்களுக்காக தான் இந்த  விமான நிலைய விரிவாக்கம்.  மக்கள் செத்துப் போனதுக்கப்புறம் யாரு அதை பயன்படுத்த முடியும் என்று  கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்