ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்.. இரு குழுக்களாகப் பிரிந்து.. மத்திய குழு ஆய்வு

Dec 07, 2024,01:45 PM IST

சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை கள ஆய்வு செய்ய நேற்று சென்னை வந்த மத்திய குழு இன்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.


தென்மேற்கு வங்க கடலில் கடந்த 29ஆம் தேதி உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது.இதனால் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் கடுமையாக சேதத்தை சந்தித்தன. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து சேதம் ஏற்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் சீரமைப்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. 




இதற்கிடையே வரலாறு காணாத மழையால் கடும் சேதத்தை சந்தித்த மாவட்டங்களில் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கை தரத்தை மீட்டு தரவும் 2000 கோடி நிதியை இடைக்கால நிவாரண நிதியாக விடுவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதேபோல் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழுக்களை விரைவில் தமிழகத்திற்கு அனுப்பி கள ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.


இதன்படி மத்திய உள்துறை இணை செயலாளரான ராஜேஷ் குப்தா தலைமையிலான எட்டு பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்னை வந்தனர். பிறகு சென்னை தலைமை செயலகத்தில் இந்த மத்திய குழுவினர் முதல்வர் மு க ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தினர்.  ஃபெஞ்சல் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவிடம் முதல்வர் மு க ஸ்டாலின் புயல் பாதிப்பு சீரமைப்புக்கு தற்கால நிவாரண நிதியாக 6,675 கோடி வழங்க பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.


இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி,கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் இன்று எட்டு பேர் அடங்கிய மத்திய குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். 2 குழுக்களாகப் பிரிந்து சென்று மத்திய குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஆய்வு நடத்தி வருகின்ரனர்.


ஆய்வை முடித்த பின்னர் வெள்ள பாதிப்பு குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்ய உள்ளனர். அதன் பேரில் தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிகிறது. நேற்றுதான் தமிழ்நாட்டுக்கு ரூ. 944 கோடி நிவாரண நிதியை மத்திய அரசு அறிவித்தது என்பது நினைவிருக்கலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்