Cyclone Fengal: தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 944.80 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு

Dec 06, 2024,10:16 PM IST

டெல்லி: தமிழ்நாட்டுக்கு, மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 944.80 கோடியை மத்திய உள்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.


தமிழ்நாட்டில் சமீபத்தில் ஃபெஞ்சல் புயல் தாக்கி பேரிடரை சந்தித்தது நமது மாநிலம். விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. பல ஆறுகள் வெள்ளப் பெருக்கை சந்தித்து ஊருக்குள் புகுந்து மக்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்தன. பெரும் பொருட் சேதத்தையும், பல உயிரிழப்புகளையும் தமிழ்நாடு சந்தித்தது.


இதையடுத்து தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ. 2000 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார். பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். நாளை முதல் மத்திய குழு வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடவுள்ளது.




இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 944.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய குழு ஆய்வுக்குப் பின்னர் மேலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் உள்துறை தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் மற்றும் பெரு வெள்ள பாதிப்பின்போதும் தமிழ்நாடு நிதியுதவி கோரியிருந்தது. பிரதமரையும், இதுதொடர்பாக முதல்வர் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். இருப்பினும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த நிலையில் மத்திய குழு வருவதற்கு முன்பே கணிசமான தொகுதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!

news

என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்

news

அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

news

ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

news

சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!

news

தேனியில் விவசாயிகளுடன் இணைந்து ஆடு மாடு மேய்ப்பேன்.. சீமானின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!

news

அதிவேக இணையத்தில் ஜப்பான் புதிய உலக சாதனை.. இந்தியாவை விட 16 மில்லியன் மடங்கு அதிகம்!

news

ஆட்சித்திறனுக்காக நோபல் பரிசு தந்தால் அதை எனக்குத் தரலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

அதிகம் பார்க்கும் செய்திகள்