டெல்லி: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. அப்போது ஜாதி வாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
காங்கிரஸ், திமுக, பாமக உள்ளிட்ட நாட்டின் அனைத்து முக்கியக் கட்சிகளும் இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் மத்திய அரசு இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வரவிருக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு சேர்க்கப்படும் என்று அறிவித்துள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதை தெரிவித்துள்ளார். CCPA எனப்படும் மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரங்களுக்கான குழு, சாதிவாரி கணக்கெடுப்பை சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு சேர்க்கப்படும். காங்கிரஸ் மற்றும் அதன் INDIA கூட்டணி சாதிவாரி கணக்கெடுப்பை அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றன. சமூகத்தில் குழப்பம் ஏற்படாதவாறு, கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு வெளிப்படையாக சேர்க்கப்பட வேண்டும்.
சில மாநிலங்கள் சாதிகளை எண்ணுவதற்கு ஆய்வுகள் நடத்தியுள்ளன. சில மாநிலங்கள் இதைச் சிறப்பாகச் செய்திருந்தாலும், வேறு சில மாநிலங்கள் அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமே வெளிப்படையற்ற முறையில் ஆய்வுகளை நடத்தின தற்போது மத்திய அரசே இதை நடத்தப் போவதால் மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தத் தேவையில்லை என்றார் அவர்.
இந்தியாவில் கடைசியாக முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இல் நடத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு COVID-19 தொற்றுநோய் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த முடிவு பல அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எடுக்கப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு மூலம், எந்தெந்த சமூகங்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து திட்டங்களை வகுக்க முடியும் என்று நம்பப்படுகிறது. இதனால், சமூகத்தில் சமத்துவம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}