கன மழை.. இன்று 13.. நாளை 11 மாவட்டங்களுக்கு.. 4 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு!

Jan 06, 2024,06:33 PM IST

சென்னை: தூத்துக்குடி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், நாளை நான்கு மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ளது.


வடகிழக்கு பருவமழை இன்னும் முடியவில்லை. இந்த மாதமும் அது நீடிக்கிறது. இந்த நிலையில் இன்றும் நாளையும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


6ம் தேதி மழை




நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


7ம் தேதி மழை


தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர் கன மழை பெய்ய வாய்ப்புண்டு.


4 மாவட்டங்களில் மிக கன மழை


செங்கல்பட்டு காஞ்சிபுரம், விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் நாளை மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்