சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அதிக கன மழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், அருவுகளில் தண்ணீர் அதிக அளவு பெருக்கெடுத்து ஓடுகிறது. அதே சமயத்தில் காற்று சுழற்சி காரணமாகவும் தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில், மேற்கிலிருந்து காற்றின் வேகம் மாறுபடுவதால், மே 31 முதல் ஜூன் 6ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மாலை மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று நகரின் ஒரு சில பகுதிகள் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
{{comments.comment}}