சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று முதல் ஒரு சில இடங்களில் திடீர் மழை செய்து வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் திடீர் மழையால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை முதல் தஞ்சை மாவட்டத்தில் காலை முதல் மழை பெய்துவருகிறது. குறிப்பாக, கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக காலை முதல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இன்றைய வானிலை மைய தகவலின் படி, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத் தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் இன்றும் நாளையும் தென்தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளை லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
பிப்ரவரி 3ம் தேதி தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
பிப். 3மற்றும் 4ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகள் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த வானிலை அறிவிப்பால் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!
பெயரளவிலான பெயர்கள்!
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}