சென்னை: நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை தெற்கு ஒரிசா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, இன்று காலையில் சட்டீஸ்கர் பகுதிகளில் நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
30-8-35 முதல் 03-09-25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கன மழை எதிரொலி.. சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவையிலும் விடுமுறை அறிவிப்பு
8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!
தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!
பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்
மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!
தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!
உழவர்களுக்கு இந்த தீபாவளி இருளாகத்தான் இருந்தது.. கொல்லாமல் கொல்லுகிறது திமுக அரசு:அன்புமணி
{{comments.comment}}