சந்திரமுகி 2 ஃபர்ஸ்ட் சிங்கிள்... "ஸ்வாகதாஞ்சலி".. எப்படி இருக்கு ?

Aug 12, 2023,02:50 PM IST
சென்னை : சந்திரமுகி 2 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை தொடர்ந்து ஃபர்ஸ்ட் சிங் பாடலையும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது. ஸ்வாகதாஞ்சலி பாடல் பற்றிய பேச்சு தான் சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருக்கிறது.

மூத்த டைரக்டர் பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் நடித்துள்ள படம் சந்திரமுகி 2. ரஜினி நடித்து 2005 ம் ஆண்டு ரிலீசான பிளாக்பஸ்டர் படமான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக காமெடி கலந்த த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஆர்ஆர்ஆர் படத்திற்கு இசையமைத்த ஆஸ்கார் இசையமைப்பாளர் கீரவாணி தான் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.



சந்திரமுகி 2 படத்தில் டைட்டில் ரோலில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இதனை அறிமுகம் செய்யும் விதமாக கங்கனாவின் சூப்பரான போஸ்டருடன் இருக்கும் ஃபர்ஸ்ட்லுக்கை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. முழுசா சந்திரமுகியாக மாறி, அழகு தேவதையாக காட்சி அளித்த கங்கனாவின் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இந்நிலையில் தற்போது படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

3.52 நிமிடங்கள் கொண்ட ஸ்வாகதாஞ்சலி பாடல் ரா...ரா...பாடலை போன்றே மொழி புரியவில்லை என்றாலும் திகில் கலந்த மெலோடியாக வெளியிடப்பட்டுள்ளது. சந்திரமுகி உடையணிந்து நாட்டிய மங்கைகளுடன் கங்கனா நடனமாடும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இதில் கங்கனாவின் அழகை பார்ப்பதா, தொட்டாதரணியின் பிரம்மாண்ட செட்டிங்கை பார்ப்பதா, வரலாற்று பேக்கிரவுண்டை ரசிப்பதா அல்லது ஸ்ரீநிதி திருமலாவின் அழகிய குரலை ரசிப்பதா என தெரியாமல் திக்குமுக்காட வைக்கிறது ஸ்வகாதஞ்சலி பாடல்.

ரா...ரா...பாடலை நினைப்படுத்துவதாகவும், அந்த அளவிற்கு இல்லை என்றும் நினைக்க வைத்தாலும் ஸ்வாகதாஞ்சலி ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது என்பது தான் உண்மை. சில பாடல்கள் கேட்டதும் பிடிக்கும். சில பாடல்கள் கேட்க கேட்க தான் பிடிக்கும். மெதுவாக தான் ஹிட் அடிக்கும். இதில் ஸ்வாகதாஞ்சலி இரண்டாவது ரகம். 

சைதன்ய பிரசாத்தின் வரிகளில், ஸ்ரீநிதி திருமலாவின் மெல்லிய குரல் மனதை கரைக்கிறது. ஜெயிலர் படத்தில் காவாலா பாடல் எப்படி ஷில்பா ராவிற்கு பெயர் வாங்கி கொடுத்ததோ அதே போல் ஸ்ரீநிதி திருமலாவிற்கு இந்த பாடல் அமையும் என்பது சந்தேகமில்லை. கங்கனாவா இது என வாயை பிளக்க வைக்கும் அளவிற்கு அழகு சிலையாக வந்து நடனமாடுகிறார் கங்கனா. பாடலின் முடிவில் குதிரை மீது ராஜா கெட்அப்பில் வரும் லாரன்ஸ், சிம்மாசனம், வாள் என வந்து போகும் காட்சிகள் அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்க வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

news

தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!

news

Crab.. வீட்டுக்கு நண்டு வந்தா நல்லதா கெட்டதா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

news

சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!

news

சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!

news

Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!

அதிகம் பார்க்கும் செய்திகள்