டெல்லி: நிலவின் சுற்றுப் பாதையில் இன்று இரவு சரியாக 7 மணியளவில் நுழைந்தது சந்திரயான் 3 விண்கலம். நிலவின் சுற்றுப் பாதையில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விடப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நிலவுப் பயணம் முக்கிய மைல்கல்லை இன்று இரவு எட்டியுள்ளது. ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஒவ்வொரு கட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் தற்போது முக்கியமான கட்டத்தை சந்திரயான் 3 விண்கலம் எட்டியுள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு சரியாக 7 மணியளவில் நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது சந்திரயான் 3 விண்கலம். நிலவில் தரையிறங்கும் தருணத்தை சந்திரயான் 3 விண்கலம் நெருங்கியிருப்பது இந்தியர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரயான் விண்கலத்தில் விக்ரம் என்ற லேன்டரும், பிரக்யான் என்ற ரோவரும் பொருத்தப்பட்டுள்ளன.
சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கும் லேன்டருக்குப் பெயர்தான் விக்ரம். இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாய் நினைவாக அந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 1749 கிலோவாகும்.
பிரக்யான் என்பது ரோபோட்டிக் வாகனம் (ரோவர்) ஆகும். சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதும் இந்த பிரக்யான் ரோபாட்டிக் வாகனமானது நிலவின் தரைப்பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வுகளில் ஈடுபடும். இந்த வாகனத்திற்கு 6 சக்கரங்கள் உள்ளன. எல்லாப் பக்கமும் திரும்பும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரக்யான் ரோபாட்டிக் வாகனம் 26 கிலோ எடை கொண்டதாகும்.
சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்திருப்பதை உலகெங்கும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அடுத்து நிலவில் சந்திரயான் 3 காலெடுத்து வைக்கும் நன்னாளை நோக்கி இந்தியர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}