டெல்லி: இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலமானது ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
முன்னதாக மாலை 5.47 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. தற்போது அந்த நேரத்தை மாற்றி 6.04 மணிக்கு தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவீட்டில், இதுவரை அனைவரும் கொடுத்து வந்த ஆதரவுக்கும், பாசிட்டிவான ஊக்குவிப்பிக்கும் நன்றி. ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும்.
இந்த நிகழ்ச்சியை இஸ்ரோவின் https://isro.gov.in இணையதளத்தில் நேரலையாக காணலாம். அதேபோல இஸ்ரோவின் யூடியூப் (https://youtube.com/watch?v=DLA_64yz8Ss), பேஸ்புக்கிலும் (https://facebook.com/ISRO) நேரலையாக காணலாம்.
DD National TV சானலிலும் சந்திரயான் 3 தரையிறங்கும் நிகழ்ச்சியை அன்று மாலை 5.27 மணி முதல் நேரலையாக காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த தேசமும் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் கால் வைக்கப் போகும் அந்த வரலாற்றுச் சாதனை நிமிடத்துக்காக காத்துக் கிடக்கிறது. மறுபக்கம், ரஷ்யாவின் நிலவுப் பயணம் தோல்வியில் முடிவடைந்துள்ளது இந்தியர்களிடையே வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
பேசா ஓவியம்.. ஒரு நிமிடக் கதை (37)
யானை சவாரி!
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
பிரியாணிக் காதல்!
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
{{comments.comment}}