- ஆனந்தி.ச
பல்லவர்களால் திறம்பட ஆட்சி செய்யப்பட்ட இம்மாவட்டம் தற்பொழுது வல்லவர்களாலும், நல்லவர்களாலும் ஆட்சி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல்லவர்கால சிற்பக்கலைக்கு என்றென்றும் சான்றாய் இருப்பது மகாபலிபுரம் என்றும், மாமல்லபுரம் என்றும் அழைக்கப்படும் கடற்கரை நகரமே .. அது எம் மாவட்டத்தில் அமைந்தது என்றென்றும் எமக்கு பெருமையே..
ஏரிகளின் மாவட்டம் என்றழைக்கப்படும் எம் மாவட்டத்தை வர்ணிப்பது எங்களுக்கென்றென்றும் மகிழ்ச்சியே .. கடற்கரையால் சூழப்பட்ட ஓர் எல்லையை கொண்டிருக்கும் இம்மாவட்டத்தின் பெருமைக்கு அளவில்லையே.. கடற்கரை கோவில் அமைந்த மாமல்லபுரம் , உலகப் பாரம்பரிய சின்னமாக விளங்குகின்றது. கற்சிற்பங்களின் நுட்பத்திற்கும் அழகிற்கும் எடுத்துக்காட்டான இத்தலத்தில் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள் என்பதில் வியப்பொன்றுமில்லை.

கல்பாக்கம் அணு மின்நிலையம், இந்தியாவின் அணுமின் உற்பத்தி மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் நாட்டின் வளர்ச்சிக்கு, செங்கல்பட்டு மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் கடுகளவும் சந்தேகமே இல்லை. பல இடங்களிலிருந்து வருகின்ற பறவைகளின் புகலிடமாக விளங்குகின்ற வேடந்தாங்கல், கரிக்கிலி போன்றவை எம் மாவட்டத்தில் அமைந்ததோடு மட்டுமல்லாமல், பல நகரங்களிலிருந்தும் மாநிலங்களிலிருந்தும் வரும் மக்களின் புகலிடமாக அமந்துள்ளதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை..
எமது மாவட்டம் தொழிற்துறையிலும் பெயர் பெற்றது. மறைமலைநகர், சிருசேரி மற்றும் மஹிந்திரா சிட்டிபோன்ற தொழில்புரங்கள் மக்களுக்கு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துகின்ற இடங்களும் இம்மாவட்டத்தில் அமைந்து மாவட்டத்திற்கே பெருமை சேர்க்கின்றது என்றால் அது மிகையாகாது. மேலும், சத்யபாமா, வி.ஐ.டி., சிஎஸ்ஐஆர் போன்ற உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் இம்மாவட்டத்தை அறிவியல் மற்றும் கல்வி வளர்ச்சியில் முன்னேறச் செய்வதோடு மட்டுமல்லாது மாவட்டதின் பெருமைகளில் பங்கெடுத்துக்கொள்ளுகின்றன.
எம்மாவட்டத்தில் அமையப்பெற்ற கோவளம் கடற்கரை மற்றும் முட்டுக்காடு படகு விடுதி ஆகியவை சுற்றுலாவிற்கும், மக்களின் அமைதியான நேரத்திற்கும் ஏற்ற இடங்களாக உள்ளன என்பதில் ஐயமில்லை . இம்மாவட்டத்தில் அமையப்பெற்ற அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, முதுமலை தேசியப் பூங்காவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது வனவிலங்கு சரணாலயம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது என்பதில் பெருமைக்கெல்லாம் பெருமை.
அப்பர் சுந்தரர் சம்பந்தர் ஆகியோரின் பாடல்கள் அமையப்பெற்ற சிவாலயம் இருக்கப்பெற்ற திருக்கழுக்குன்றமும் எம்மாவட்டத்தின் சொத்து. பல மாநிலங்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் அமந்துள்ள “தக்ஷிண சித்ரா” அமையப்பெற்றதும் எம் மாவட்டத்திலேயே என்பதும் கூடுதல் சிறப்பு.
மொத்தத்தில் அடர்ந்த பசுமை, நீர்நிலைகள், வரலாற்று புகழ்கள் மற்றும் தொழில்துறை முன்னேற்றத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் வளர்ச்சியிலும், பாரம்பரியத்திலும் உயர்ந்த இடம் பிடித்து ,இன்றும் என்றும் ,அனைவரின் நெஞ்சிலும் நீங்காவிடத்தை பிடித்துள்ளது. அன்று பல்லவர் பூமி.. இன்று பலரது பூமி.. இதுதான் எங்கள் செங்கையின் பெருமை!
(ஆனந்தி ச, பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, கண்டிகை, செங்கல்பட்டு மாவட்டம்)
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
தொடர்ந்து மக்களை புலம்ப வைத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
வாழ்வின் விடைதெரியாத மர்மங்கள்.. நியாயங்களைத் தேடும் மனங்கள்!
வலிகளில் வாழ்க்கை...!
அதிசயம்!
மனிதனுக்கு பாடம் சொன்ன காகம் (சிறார் கதை)
மனம்...!
{{comments.comment}}