சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு சென்னையை கடந்த சில நாட்களாக கடந்த 2 நாட்களாக போட்டு உலுக்கிக் கொண்டிருந்த Michaung (மிச்சாங் அல்லது மிக்ஜாம்) புயல் தற்போது சென்னையை விட்டு அப்பால் போய் விட்டது. வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த சென்னை தற்போது அதிலிருந்து மீளத் தொடங்கியுள்ளது.
Michaung புயல் வரலாறு காணாத பாதிப்பை சென்னைக்கும், அதன் புறநகர்களுக்கும் ஏற்படுத்தி விட்டது. இந்த அளவுக்கு இதுவரை மழையைப் பார்த்ததில்லை என்று கூறும் அளவுக்கு மிகப் பெரிய மழைப் பொழிவை சந்தித்தது வட தமிழ்நாடு. குறிப்பாக சென்னை.
கடந்த 45 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 470 மில்லி மீட்டர் அளவுக்கு அதீதமான மழைப்பொழிவை சென்னை சந்தித்தது. Michaung புயல் காரணமாக சென்னை நகரமே கடுமையாக ஸ்தம்பித்துப் போனது. ஒரே நேரத்தில் அப்ஸ்ட்ரீம் மற்றும் லோயர் ஸ்ட்ரீம் பகுதிகளில் பேய் மழை கொட்டியதால் அடையாறு, கூவம் ஆகிய ஆறுகள் நிரம்பி வழிந்தன. சாலைகள், தெருக்களிலும் வெள்ளம் போல மழை நீர் ஓடியதால் தண்ணீர் வடிய முடியாமல் திணறிப் போனது சென்னை.

கிட்டத்தட்ட 42 மணி நேரம் அளவுக்கு கன மழை கொட்டித் தீர்த்து விட்டது. நேற்று நள்ளிரவு வாக்கில்தான் மழை சற்று தணிந்து அமைதிக்குத் திரும்பியது சென்னை வானம். புயலானது நெல்லூர் மாவட்டக் கடலோரப் பகுதிக்கு ஷிப்டானதால் சென்னை தப்பியது.. தற்போது சுத்தமாக மழை நின்று விட்டது. வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது. நகரிலும், புறநகர்களிலும் தேங்கி நின்ற வெள்ளம் வழிந்தோட ஆரம்பித்துள்ளது. சென்னையின் முக்கியச் சாலைகளில் வெள்ளம் ஓரளவு வடிந்து விட்டது. பல பகுதிகளில் இன்னும் வடியவில்லை.
புறநகர்களைப் பொறுத்தவரை இன்னும் முழுமையான இயல்பு நிலை திரும்பவில்லை. மெல்ல மெல்ல நீர் வடிய ஆரம்பித்துள்ளது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த நீர் வடிந்து விட்டது. தெருக்களில் நீர் முழுமையாக வடியவில்லை. புயல் தற்போது முழுமையாக விலகி விட்டதால் சென்னைக்கு இன்றைய காலை சற்று நிம்மதியாக விடிந்துள்ளது. வெள்ளம் முழுமையாக வடிந்தால் இயல்பு நிலைக்கு சென்னையும் அதன் புறநகர்களும் திரும்பி விடும்.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}