சென்னை: சென்னையில் இன்று கடுமையான பனிமூட்டம் நிலவியதால் விமான சேவை கடும் பாதிப்பை சந்தித்தது. இதனால் பயணிகள் கடும் அவதியுற்றனர்.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் அதிகாலையில் அதிகப்பனிமூட்டமும் பிற்பகலுக்குப் பிறகு அதிக வெயிலும் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. அதேபோல் செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட இன்று அதிகாலை கடுமையான பனிப்பொழிவு நிலவியது.
தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் எதிரே உள்ள வாகனம் கூட கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். இந்த மூடுபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
சென்னையில் விமான சேவை பாதிப்பு

பனிமூட்டம் காரணமாக சென்னை விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆறு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், ஹைதராபாத் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டன. லண்டனில் இருந்து 317 பயணிகளுடன் வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. 252 பயணிகளுடன் மஸ்கட்டில் இருந்து புறப்பட்டு சென்னை வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. 122 பயணிகளுடன் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மற்றும் புனேவிலிருந்து 152 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் திருவனந்தபுரத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதே சமயத்தில் குவைத்தில் இருந்து 148 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக தொடர்ந்து வானில் வட்டமடித்துக் கொண்டே இருந்தது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியற்றனர்.
சென்னை மட்டுமல்லாமல் புதுச்சேரி, வேலூர், திருப்பதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று கடுமையான மூடுபனி நிலவியது. அதேபோல் திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர், போன்ற பகுதிகளிலும் மிதமான மூடுபனி நிலவியது.
வட தமிழகப் பகுதிகளில் நாளையும் அடர்ந்த மூடுபனி காணப்படும். நாளை காலையிலும் இதே போன்ற பனிப்பொழிவை எதிர்பார்க்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஸ்டாலின் 2...இபிஎஸ் 5...போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசும் திமுக-அதிமுக
பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது தான் திமுகவின் வழக்கம்: அண்ணாமலை
திமுக-அதிமுக.,வின் தேர்தல் வாக்குறுதிகள்...என்ன செய்ய போகிறார் விஜய்?
அதிமுக-திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் சாத்தியமா?...வாங்க தூர்வாரலாம்
பூம்பூம் மாடு வளர்ப்பவர்களுடன் 'காணும் பொங்கல்' கொண்டாடிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஊழல் செய்தால் பணி மாற்றம் இல்லை, பணி நீக்கம் செய்ய வேண்டும்: சீமான் ஆவேசம்!
வீரர்களின் கனவு நனவானது... ஜல்லிக்கட்டை தூக்கி சாப்பிட்ட முதலவர் முக ஸ்டாலினின் 2 அறிவிப்புக்கள்!
சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை...முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பெண்களுக்கு ரூ.2,000 உரிமைத்தொகை... ஆண்களுக்கு இலவச பஸ் பயணம்...இபிஎஸ் அதிரடி அறிவிப்பு
{{comments.comment}}