சென்னையில் டிரெய்னைப் பிடிச்சா.. ஜஸ்ட் 4 மணி நேரம்தான்.. பெங்களூரு போய்ரலாம்!

Aug 19, 2023,09:59 AM IST
சென்னை: சென்னை டூ பெங்களூர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் 4 மணி நேரமாக குறைக்கப்படவுள்ளது. மேலும் சில ரயில்களின் பயண நேரமும் சுமார் 20 நிமிடங்கள் வரை குறையப்போகிறது.

சென்னை - ஜோலார்பேட்டை இடையிலான விரைவு ரயிலின் வேகம் மணிக்கு 110 கிலோமீட்டர் இருந்து 130 கிலோ மீட்டராக அதிகரிக்கப்படுகிறது.  இந்த வழித்தடத்தில், தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்கள் சீரமைக்கப்பட்டதால் தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதேபோல அரக்கோணம் -ஜோலார்பேட்டை இடையிலான பயண நேரமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   

இந்த வழித்தடங்களின் பயண நேரம் குறைப்பால் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் அனைத்து ரயில்களின் பயண நேரமும் 4.25 மணி நேரமாகவும் , ஆகவும் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 4 மணி நேரமாகவும் குறையும். பெங்களூரு மட்டுமல்லாமல், இந்த மார்க்கத்தில் கோவை ,கொச்சி ,திருவனந்தபுரம், கோழிக்கோடு ,மும்பை போன்ற பெரிய நகரங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களின் பயண நேரமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரயிலின் பயண நேரம் குறைவதால் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இனி ஆம்னி பஸ்களை விட வேகமான முறையில் நாம் பெங்களூரு உள்ளிட்ட ஊர்களைச் சென்றடைய முடியும் என்பதோடு பயணச் சோர்வும் வெகுவாக குறையும்.

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்