சென்னை: சென்னையில் வரும் டிசம்பர் 27 முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறும் 48வது புத்தக கண்காட்சியுடன் இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்புப் போட்டிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் 2025 ஆம் ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி வரும் டிசம்பர் 27 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை நந்தனம் ஒய் எம் சி மைதானத்தில் தொடங்க உள்ளது. கண்காட்சி ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது 48வது புத்தகக் கண்காட்சியாகும். இந்நிகழ்ச்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
இங்கு மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டு, அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடியுடன் வழங்கப்பட உள்ளன. மேலும் மாணவர்களிடையே வாசிக்கும் திறனை ஊக்குவிப்பதற்காக அனைவரும் புத்தகக் கண்காட்சிக்கு வந்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் மாணவர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படவுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியுடன் இணைத்து மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி புத்தகக் காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியும், பேச்சுப் போட்டியும் வழக்கம் போல் நடை பெற இருக்கின்றது.
ஓவியப் போட்டியும், பேச்சுப் போட்டியும்
இதில் ஓவியப் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு இயற்கைக் காட்சிகள், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை புத்தகக்காட்சி, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு - தமிழகத்தின் சுற்றுலா தலங்கள், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு- சுதந்திர போராட்ட தியாகிகள் ஓவியப்போட்டி ஜனவரி 7 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு புத்தகக்காட்சி வளாகத்தில் நடைபெறும்.
அதேபோல் பேச்சுப் போட்டி 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எனக்கு பிடித்த தேசத்தலைவர்கள் என்ற தலைப்பிலும்,
9,10 வகுப்பு மாணவர்கள் என் நாடு என் மொழி என் மக்கள் என்ற தலைப்பிலும், 11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் வாழ்க்கைக்கு வழி காட்டும் திருக்குறள் என்ற தலைப்பிலும், பேச்சுப்போட்டி ஜனவரி 8 ஆம் தேதி காலை 8 மணிக்கு புத்தகக்காட்சி வளாகத்தில் நடைபெறும்.
நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
முதல் பரிசு- ரூ.3000
இரண்டாம் பரிசு- ரூ.2000
மூன்றாம் பரிசு- ரூ.1000
ஆறுதல் பரிசு 10 - ரூ.500 வழங்கப்படும்.
போட்டிகள் குறித்து மேற்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ள ஆர். ஈஸ்வர் 94442 18666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பரிசுத்தொகை கூப்பன் ஆக மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}