சென்னை: சென்னை மாநகர சாலை பகுதியில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் 1.30 கோடி அபராத வசூல் செய்ததாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர சாலை பகுதிகளில் மாடுகள் உலா வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அதே போல் சாலையோரங்களில் மாடுகள் உலா வருவது, படுத்திருப்பது போன்றவற்றால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் நடந்து செல்பவர்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அப்படி சாலையோரங்களில் படுத்திருக்கும் மாடுகள் திடீரென கொம்புகளை சிலுப்பிக் கொண்டு தாக்கும் அசம்பாவிதங்களும் நடைபெறுகின்றன.

இதனால் தெருக்கள் மற்றும் சாலைகளில் மாடுகள் நாய்களின் தொல்லை என நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் இதனால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த ஆண்டு அருகம்பாக்கத்தில் சிறுமி ஒருவர் பள்ளி முடித்து வீடு திரும்பும் போது தெருவில் உலா வந்த மாடு முட்டி வீசி எறிந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் எனவும், மீறி மாடுகள் சாலையில் சுற்றித் திரிந்தால் மாட்டு உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதனையடுத்து மாநகராட்சி தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதோடு மாடுகளைப் பிடித்து அபராதம் விதிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.இருப்பினும் மாட்டின் உரிமையாளர்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் முதல் முறை பிடிக்கப்பட்டால் பத்தாயிரம் ரூபாயும், இரண்டாவது முறை பிடிக்கப்பட்டால் மாட்டின் உரிமையாளருக்கு 15,000 அபராதம் விதிக்கப்படும். அதனை தொடர்ந்து ஒரு மாடுக்கு பராமரிப்பு செலவுக்காக கூடுதலாக ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் சென்னையில் சாலையில் சுற்றித்திரிந்த 2,527 மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}