சென்னையில்.. தெருவுக்கு பத்து நாய்கள்.. தவிக்கும் மக்கள்.. ஆக்ஷனில் குதித்த மாநகராட்சி!

Mar 06, 2023,09:54 AM IST
சென்னை: சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாய் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்வது உயிருக்கே ஆபத்து என்ற நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து தெரு நாய்களைப் பிடிக்க சென்னை மாநகராட்சி களத்தில் குதித்துள்ளது.



சமீப காலமாக நாய்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. நாய்களை முன்பெல்லாம் தொடர்ந்து பிடித்துச் செல்வார்கள். இதனால் தெருக்களில் நாய் பயம் இல்லாமல் மக்களால் நடமாட முடிந்தது. ஆனால் இன்று அப்படி இல்லை. தெருவுக்கு 10 நாய்கள் இருக்கின்றன. 



இவற்றில் பெரும்பாலானவை அந்தத் தெரு மக்களுக்குப் பாதுகாப்பாக உள்ளன என்றாலும் கூட சில நாய்கள், அந்தத் தெருவைச் சேராத யாரேனும் வந்தால் அவர்களை துரத்துவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் முக்கியச் சாலைகளிலேயே கூட பயமில்லாமல் நடமாட முடியாத நிலைதான் உள்ளது.

சமீபத்தில் குரோம்பேட்டையில் இரவில் டூவீலரில் வந்த பெண் ஒருவர் நாய் துரத்தியதால் தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த நிலையில் சென்னையில் அதிகரித்து வரும் நாய்த் தொல்லை தொடர்பாக பெருமளவில் புகார்கள் குவிந்ததால் தற்போது நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 300க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு அவற்றுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதாம்.  சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் தெரு நாய்களைப் பிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை நகரில் இதுவரை வெறிநாய்க்கடி பிரச்சினை என்று புகார்கள் வரவில்லை. முன்பெல்லாம் தினசரி 60 -70 புகார்கள் வரும். ஆனால் தற்போது அப்படியெல்லாம் இல்லை. இருப்பினும் நாய்கள் அதிகமாக இருப்பதாக புகார்கள் வருவதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

சென்னையில் நாய் பிடிப்பதற்காக 75  பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனராம். இவர்கள் 15 மண்டலங்களிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனராம்.  வாகனங்களுடன் இவர்கள் தெருத் தெருவாக செல்கிறார்கள். அந்தந்த வாகனத்திலேயே கால்நடை மருத்துவர் ஒருவரும் உடன் செல்கிறார்.  நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யும் பணியில் ப்ளூ கிராஸ் அமைப்புடனும் இணைந்து மாநகராட்சி செயல்படுகிறது. புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, மீனம்பா்கம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் கருத்தடை ஆபரேஷன் செய்யும் மையங்கள் உள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்