"White Paper": மழை நீர் வடிகால் பணிகள் குறித்து.. அறிக்கை வெளியிட சென்னை மாநகராட்சி பிளான்!

Jan 03, 2024,01:28 PM IST

சென்னை: சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழை நீர் வடிகால் பணிகள் குறித்த விவரமான வெள்ளை அறிக்கை வெளியிட்டு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


திமுக ஆட்சிக்கு வந்ததும் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் விரிவான முறையில் திட்டமிடப்பட்டு போர்க்கால அடிப்படையில் அது மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் நகர் முழுவதும் நடைபெற்றது. இந்தப் பணிகள் முடிவுற்றால் சென்னையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் வெள்ளம் வராது என்று திமுக அரசு கூறி வந்தது.


அதன்படியே சில மழைகள் வந்தபோது பெரிய அளவில் சிட்டியில் தண்ணீர் தேங்கவில்லை. மக்களும் அடடே சூப்பர் என்று ஆச்சரியப்பட்டனர், பாராட்டுகளும் குவிந்தன. ஆனால், சென்னையில் மிச்சாங் புயல் காரணமாக  கனமழை பெய்தது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.




இதற்காகவே காத்திருந்த எதிர்க்கட்சிகள், மழை நீர் வடிகால் அமைத்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது எப்படி, 4000 கோடிக்கு வேலை பார்த்தீர்களே.. அது என்னாச்சு.. எங்கே போச்சு அந்தப் பணம் என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் பல தரப்பினரும் கோரிக்கை விட்டனர்.


இருப்பினும் இதற்குப் பதில் அளித்த அமைச்சர் கே.என். நேரு  மழை நீர் வடிகால் பணிகள் குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது இதுதொடர்பாக விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டை விட, சென்னையில் பெரு மழையும், வெள்ளமும் வந்து பாதிப்பை ஏற்படுத்தியது மக்களிடையே கூட அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது. பலர் சொந்த ஊர்களுக்கு இடம் பெயரும் கட்டாயம் ஏற்பட்டது. பலர் சொந்த வீடுகளை விட்டு நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு இடம் பெயரும் சூழல் ஏற்பட்டது. மழை வெள்ளம் நிற்காது என்று சொல்லியும் நின்றது ஏன்று மக்களே கூட கேள்விகளை எழுப்பினர்.


ஆனால் அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் என்னவென்றால்.. மழை நீர் வடிகால் பணிகள் நடந்ததால்தான் இந்த அளவுக்காவது நிலைமை சமாளிக்கப்பட்டது. ஒரு வேளை இந்தப் பணிகள் நடந்திருக்காவிட்டால், 2015ல் ஏற்பட்டது போன்ற நிலை ஏற்பட்டிருக்கும். மேலும் இந்த முறை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் பாதிப்பை நாம் தவிர்த்திருக்கிறோம். ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால்தான் இந்த அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்

news

தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி

news

2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?

news

அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?

news

தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

news

'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு

news

இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது

news

பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி

news

தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு

அதிகம் பார்க்கும் செய்திகள்