ஆபத்து விளைவிக்கும் செல்ல பிராணிகளை.. பொது இடங்களுக்கு கொண்டு வந்தால்.. கடும் நடவடிக்கை!

May 08, 2024,06:36 PM IST

சென்னை: சென்னையில் தொடர்ந்து சிறுவர்களை நாய் கடித்த சம்பவம் அரங்கேறி வரும் நிலையில், ஆபத்து விளைவிக்கும் நாய்கள் மற்றும் செல்ல பிராணிகளை பொது இடங்களில் கட்டுப்பாடு இன்றி திரிய விட்டால் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி கடுமையாக எச்சரித்துள்ளது.


கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு  நுங்கம்பாக்கம் பூங்காவில்  காவலராக பணியாற்றும் ரகுவின் மகள் சுதக்ஷா  விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராட்வெய்லர் நாய்கள் ரகுவின் மகளை கடித்து குதறியது. இதனை தடுக்க முயன்ற ரகுவின் மனைவி சோனியாவையும் கடித்தது. அந்த சமயத்தில் நாயின் உரிமையாளர் நாயை கட்டுப்படுத்த முயன்று அவரால் முடியவில்லை. தப்பித்து ஓடிவிட்டார்.




நாய் கடித்து காயம் அடைந்த இருவரையும் மீட்டு அங்கிருந்த பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நாய் உரிமையாளர் புகழேந்தி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இந்த விசாரணையில் நாய் வளர்ப்பு உரிமத்தை புகழேந்தி பெறவில்லை என்பது தெரிய வந்தது.


அதேபோல் நேற்று மீண்டும் சென்னை வேளச்சேரியில் நாய் கடித்த மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. கோடை விடுமுறைக்காக ஆலத்தூர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த தனது அத்தை வீட்டிற்குச் அஸ்வந்த் என்ற 11 வயது சிறுவன் சென்றான். நேற்று மாலை விளையாடிக் அங்கு விளையாடிக் கொண்டிருக்கும்போது சைபீரியன் ஹஸ்கி வகை நாய் ஒன்று திடீரென சிறுவனை கடித்தது. இதில் சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் சிறுவன் அலறி துடித்தான். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.


இதனை தொடர்ந்து சிறுவனுடைய பெற்றோர்கள் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.


இந்த நிலையில் சென்னையில் நாய் கடித்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆபத்து விளைவிக்கும் வகையில் நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளை தெருக்கள், பூங்காக்கள், மற்றும் பொது இடங்களில் கட்டுப்பாடு இன்றி திரியவிட்டால் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் அவ்வாறான நாய்கள் மற்றும் செல்ல பிராணிகளை இந்திய பிராணிகள் நல வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்