சென்னை : சென்னை ஈசிஆர் சாலையில் காரில் பெண்களை துரத்தி சென்ற விவகாரத்தில் மொத்தம் 7 பேருக்குத் தொடர்பு உள்ளதாகவும், அதில் 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேரைத் தேடி வருவதாகவும் பள்ளிக்கரணை துணை காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்புகள் ஏதும் இல்லை என்றும் இணை ஆணையர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் காரில் வந்த இளைஞர்கள் சிலர், மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்தி உள்ளனர். தொடர்ந்து பெண்கள் பயணம் செய்த காரையும் அந்த இளைஞர்கள் சுற்றி வளைத்து தகராறில் ஈடுபடுவது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பரபரப்பை கிளப்பியது. இந்த விவகாரத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே பெண்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், காரில் பெண்களை துரத்தி சென்ற இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பெண்கள் சென்ற கார் இளைஞர்களின் காரை உரசி சென்றதாகவும், நியாயம் கேட்பதற்காகவே இளைஞர்கள் பெண்கள் வந்த காரை துரத்தி சென்றதாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்பட்டது.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பதற்றமான நிலையை ஏற்படுத்தியதால் 5 தனிப்படைகள் அமைத்து போலீசார், அந்த இளைஞர்களை தேடி வந்தனர். ஈசிஆர் சாலையில் உள்ள சிசிடிவி கேமிராக்களையும் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பெண்களை துரத்தி சென்ற இரண்டு கார்களை பறிமுதல் செய்ததுடன், இதில் தொடர்புடைய சந்துரு என்ற கல்லூரி மாணவரை உள்பட 4 பேரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில், புகார் வந்த 10 நிமிடங்களிலேயே சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டுக்குப் போலீஸார் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் 7 பேருக்குத் தொடர்பு உள்ளது. அதில் சந்துரு என்பவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களைத் தேடி வருகிறோம். இதில் சந்துருவுக்கு சிட்டி லிமிட்டில் 2 வழக்குகளில் தொடர்பு உள்ளது.
இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்புகள் ஏதும் இல்லை. டோல்கேட் போன்றவற்றில் காசு கொடுக்காமல் செல்வதற்காகவே காரில் திமுக கொடியை கட்டியுள்ளனர். அதை கட்டியது அந்தக் காரின் டிரைவர் என்று தெரிய வந்துள்ளது. புகார் கொடுத்தவர்களின் கார் இந்த நபர்களின் காரில் இடிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார் கார்த்திகேயன்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி
வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
{{comments.comment}}