சென்னை : சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையின் பல பகுதிகளில் என்ன தான் மெட்ரோ ரயில் சேவை வந்தாலும் மின்சார ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையே அதிகம். சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மிக குறைந்த கட்டணத்திலேயே பயணிக்கலாம் என்பதால் அதிகமான மக்கள் மின்சார ரயிலிலேயே பயணம் செய்கிறார்கள். வேலைக்கு செல்வோரும் அதிகமானவர்கள் மின்சார ரயில்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது வார இறுதி நாட்களுடன், காந்தி ஜெயந்தி விடுமுறையும் சேர்ந்து கொண்டுள்ளதால் சென்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். விடுமுறை நாள் என்பதால் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால் தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தெற்கு ரயில்வே திட்டமிட்டது.
தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான மின்சார ரயில்களும், கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்களும் காலை 10.30 முதல் பகல் 3 மணி வரை இரண்டு நாட்களுக்கு இயக்கப்படாது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்ட நிலையில் கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாது செய்யப்படவில்லை. இதனால் மாநகர பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களும் சரியாக கிடைக்காமல் பலர் அவதி அடைந்துள்ளனர்.
விடுமுறை நாள் என்பதால் குடும்பத்துடன் வெளியில் செல்ல நினைத்தவர்கள் மின்சார ரயில்சேவை நிறுத்தப்பட்ட விபரம் தெரியாமல் ரயில் நிலையங்களில் கூட்டம் கூட்டமாக வந்து காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}