சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இருவரின் 20 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
சட்டரீதியாகத்தான் இன்று இவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் இவர்கள் இருவருமே கடந்த 2 வருடமாக பிரிந்துதான் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் தனுஷ். இந்த இருவரும் காதலித்து கடந்த 2004ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். திரையுலகில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட திருமணம் இது.

தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணத்திற்குப் பின்னர் ஐஸ்வர்யாவும் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார் . இயக்குநராக அவதாரம் எடுத்த அவர் தனது கணவர் தனுஷையும், ஸ்ருதி ஹாசனையும் வைத்து 3 என்ற படத்தை இயக்கினார். இதுதான் இசையமைப்பாளர் அனிருத்தின் முதல் படமும் கூட. தொடர்ந்து சில படங்களை இயக்கிய ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
இதைத் தொடர்ந்து இருவரும் பிரியப் போவதாக அறிவித்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இவர்களை மீண்டும் சேர்க்க இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் முயற்சித்தனர். ஆனால் எந்த முயற்சியும் பலன் தரவில்லை. இந்த நிலையில் இன்று இருவரது விவாகரத்து வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி சுபாதேவி, இருவரது திருமணத்தையும் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார். இதன் மூலம் இருவரது திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளது.
தற்போது தனுஷ் இயக்குநராகவும் பிசியாக இருக்கிறார். இட்லி கடை என்ற படத்தை இயக்கி வருகிறார். இன்னொரு படத்தையும் இயக்கி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}