மழைக்காலங்களில் ஃபிரிட்ஜ், மிக்ஸிகளை முறையாக பராமரிப்பது முக்கியம்.. ஆவடி அருகே நடந்த பெரும் சோகம்

Aug 07, 2024,02:17 PM IST

சென்னை:   ஆவடி அருகே ஸ்நாக்ஸ் எடுப்பதற்காக ஃபிரிட்ஜை திறந்த போது ஐந்து வயது குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை ஆவடியில் உள்ள நேதாஜி தெருவை சேர்ந்தவர்  கௌதம் மற்றும் பிரியா தம்பதி.இவர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு லோன் வாங்கி தரும் பணியினை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஐந்து வயதான மூத்த மகள் ரூபாவதி தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த ரூபாவதி தனது தங்கைகளுடன் விளையாடி உள்ளார். இதைத்தொடர்ந்து ஃப்ரிட்ஜில் உள்ள ஸ்னாக்ஸை எடுப்பதற்காக திறந்து உள்ளார். 


அப்போது  திடீரென எதிர்பாராத விதமாக குழந்தையை மின்சாரம் தாக்கி உள்ளது. உடனே ரூபாவதி மயங்கி கீழே சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த தாய் பிரியா பதறிப்போய்  குழந்தையை எழுப்பி பார்த்தும் எழவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா உடனே மகள் ரூபாவதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார்.




அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ரூபாவதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டதும் குழந்தையின் பெற்றோர்கள் கதறி துடிதுடித்தனர். பின்னர் குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தை அறிந்த ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதன் பின்னர் குழந்தை எப்படி இருந்தது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தை  ஸ்னாக்ஸ் எடுப்பதற்காக ஃபிரிட்ஜை திறந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஐந்து வயது குழந்தை ரூபாவதி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 


மழைக்காலத்தில் மின்கசிவு அபாயம்


மின் கசிவு காரணமாக ஃப்ரிட்ஜ்,வாஷிங் மெஷின், செல்போன், உள்ளிட்ட உபகரணங்களால் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க எவ்வளவு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் ஒரு சிலரின் அஜாக்கிரதையால் இது போன்ற சம்பவம் நிகழ்ந்து தான் வருகிறது. இது போன்ற சம்பவம் நிகழ்வதற்கு காரணம்  போதுமான விழிப்புணர்வு இன்மையே‌. 


பொதுமக்கள் அவ்வப்போது வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்களில் மின்சாரம் எவ்வளவு பாய்கிறது.. மின்சாரம் சீராக இருக்கிறதா அல்லது அதிகமாக பாய்கிறதா.. என்பது தொடர்பான சோதனை செய்து கொண்டு அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இதிலிருந்து விடுபட முடியும். குறிப்பாக மழைக்காலத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இது எங்கேயோ நடந்த இழப்பு என்று செய்தியை படித்து முடித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்காமல், நம் வீட்டிலும் இதுபோல நடந்தால் என்னாகும் என்பதை உணர்ந்து கவனத்துடன் இருக்க முயற்சிப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்

news

தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி

news

2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?

news

அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?

news

தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

news

'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு

news

இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது

news

பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி

news

தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு

அதிகம் பார்க்கும் செய்திகள்