சிம்புவிற்கு வந்த புதிய பிரச்சனை.. அதிரடி உத்தரவு போட்ட ஹைகோர்ட்

Aug 30, 2023,11:26 AM IST
சென்னை : நடிகர் சிம்பு மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என வேல்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ரெட் கார்ட் போடப்பட்டதால் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த சிம்பு, வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த படம் செம ஹிட் ஆனதால் சிம்புவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புக்கள் குவிந்து தற்போது செம பிஸியாக நடித்து வருகிறார்.



சமீபத்தில் வேல்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்த வெந்து தணிந்தது காடு படத்திலும் சிம்பு நடித்தார். இந்த படமும் நன்கு பேசப்பட்டதால் அடுத்ததாக கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க சிம்புவுடன் ஒப்பந்தம் போட்டதாக அறிவித்தது வேல்ஸ் நிறுவனம். ஆனால் அதற்கு பிறகு தகவல் ஏதும் இல்லை. சிம்பு, பத்து தல படத்தை தொடர்ந்து, மற்ற படங்களின் நடிக்க கமிட்டானார். இதனால் கொரோனா குமார் படம் டிராப் செய்யப்பட்டதாக தகவல்கள் பரவின.

இந்நிலையில் கொரோனா குமார் படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்து விட்டு, படத்தை முடிக்காமல் இருக்கிறாம் சிம்பு. இதனால் கொரோனா குமார் படத்தை முடித்து கொடுக்கும் வரை மற்ற படங்களில் நடிக்க சிம்புவிற்கு தடை விதிக்க வேண்டும் என வேல்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது. 

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், செப்டம்பர் 19 ம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்தவில்லை என்றால் வேறு படங்களில் நடிக்க சிம்புவிற்கு தடை விதிக்கப்படும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை

news

எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு

news

Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா த‌வெக?

news

ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!

news

மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!

news

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு

news

மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!

news

தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!

news

மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!

அதிகம் பார்க்கும் செய்திகள்