நடிகர் சிவாஜிகணேசன் வீட்டை ஜப்தி செய்ய.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Mar 03, 2025,06:52 PM IST
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி பங்குதாரராக  ஈஷன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரிக்க தனபாக்கியம் என்டர்பிரைஸ் நிறுவனம் ரூ. 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தனர்.

இந்த கடன் தொகைக்கு 30 சதவீதம் வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், கடன் தொகையை திருப்பி தராததை  முன்னிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். அதன்படி, நீதிபதி ரவீந்திரன் கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும் படி கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிட்டார்.



இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கக் கோரிய போது, படம் முழுமையடைய வில்லை எனக் கூறி பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய ஈசன் புரொடக்ஷன்ஸ் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். மேலும், இந்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட சார் பதிவாளருக்கும் தகவல் தெரிவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையை மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார். 
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை

news

தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி

news

சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது

news

வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?

news

50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?

news

சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?

news

சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!

news

சுதந்திரம் காப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்